நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் அமைச்சரவைக் குழு, மார்ச் 2022 க்குப் பிறகு, டிசம்பர் 2024 வரை பிரதமரின் தெருவோர வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதி அதாவது (PM SVANIdhi) திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட பிணையமில்லாத மலிவு கடன் கார்பஸ், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக அளவில் ஏற்றுக்கொள்வது மற்றும் தெரு வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடதக்கது.
இந்தத் திட்டம் தெருவோர வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய அடமானம் இல்லாத கடன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டிருந்தது.
இன்றைய ஒப்புதலின் படி, கடன் தொகை ரூ. 8,100 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் தொழில்களை மேலும் விரிவுபடுத்தவும், அவர்களை ஆத்மநிர்பராக மாற்றுவதற்கான மூலதனத்தையும் வழங்குகிறது.
விற்பனையாளர்களுக்கு கேஷ்பேக் உட்பட, டிஜிட்டல் பேமெண்ட் ஊக்குவிப்புக்கான பட்ஜெட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலால் நகரங்களில் வசிக்கும் 1.2 கோடி, இந்தியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
PM SVANidhiயின் கீழ் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2022 நிலவரப்படி, 31.9 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, 29.6 லட்சம் கடன்கள் மொத்தம் ரூ. 2,931 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கடனைப் பொறுத்தவரை, 2.3 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, 1.9 லட்சம் கடன்கள் மொத்தம் ரூ.385 கோடி வழங்கப்பட்டுள்ளன, என்பது குறிப்பிடதக்கது.
உழவர் சந்தையில் நுழைந்த கலேக்டர்: வியாபாரிகள் கோரிக்கை நிறைவேறுமா?
பயனடைந்த தெருவோர வியாபாரிகள் 13.5 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முடித்து ரூ.10 கோடி கேஷ்பேக் பெற்றுள்ளனர். வட்டி மானியமாக ரூ.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 2020 இல் திட்டம் தொடங்கப்படுவதற்கு, காரணமான காலநிலையாகும். தொற்றுநோய் காரணமாக, சிறு வணிகங்கள் பெருமாளவு பாதிக்கப்பட்டன, இதனால் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்ந்தது. இன்றளவும், இது முழுமையாக குறையாததால், திட்டத்தின் முன்மொழியப்பட்ட நீட்டிப்பு அவசியமாகும்.
டிசம்பர் 2024 வரை கடன் வழங்குவது, முறையான கிரெடிட் சேனல்களுக்கான அணுகலை நிறுவனமயப்படுத்தவும், அவர்களின் வணிக விரிவாக்கத்தைத் திட்டமிடவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களில் சாத்தியமான NPA களின் தாக்கத்தைக் குறைக்கவும் மற்றும் வழங்கவும் உதவும் என்பது இதன் சிறப்பாகும். தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு, இதன் மூலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: