பட்ஜெட் 2022 : டிஜிட்டல் ரூபாய், இது என்ன, இது எப்படி செயல்படும் என்று அறிந்துக்கொள்ளுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Budget 2022: Digital Rupee, Learn What It Is and How It Works

பட்ஜெட் 2022 : இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 ஆம் ஆண்டில் டிஜிட்டல் ரூபாய்களை வழங்கத் தொடங்கும் என்று நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்பட்டபடி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் கருத்துப்படி, டிஜிட்டல் நாணயமானது மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் நாணயத்தில் பயன்படுத்தப்படும்.

டிஜிட்டல் பேங்கிங் வேகமாக வளர்ந்து வருகிறது (Digital Banking is growing rapidly)

சமீப ஆண்டுகளில் டிஜிட்டல் பேங்கிங், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் ஃபின்டெக் தொழில்நுட்பங்கள் நாட்டில் வேகமாக உயர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். டிஜிட்டல் வங்கியின் பலன்கள் நுகர்வோருக்கு உகந்த வகையில் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, இந்தத் தொழில்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த நோக்கத்தை முன்னெடுத்து, நாட்டின் 75வது சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை (DBUs) ஷெட்யூல்டு வணிக வங்கிகள் நிறுவும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

எப்போது வேண்டுமானாலும் எங்கும் தபால் அலுவலக சேமிப்பு:

மற்றொரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், நிதியமைச்சர் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும் என்றும், நிதிச் சேர்க்கை மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம்கள் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றங்கள் மூலம் கணக்கு அணுகலை அனுமதிக்கும். இவை, தபால் அலுவலகம் மற்றும் வங்கி கணக்குகளுக்கு இடையில் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஒன்றுக்கொன்று இயங்கக்கூடிய தன்மை மற்றும் நிதி சேர்க்கையை எளிதாக்குகிறது.

டிஜிட்டல் கட்டணம்:

முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் சூழலுக்கான நிதி உதவி 2022-23ல் பராமரிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இது டிஜிட்டல் வாலட்களைப் பயன்படுத்த அதிக மக்களை ஊக்குவிக்கும். செலவு குறைந்த மற்றும் பயனருக்கு ஏற்ற கட்டண தீர்வுகளை ஊக்குவிப்பது முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:

இசையை கேட்டு துங்குபவரா நீங்கள், அப்படியானால் உங்களுக்கான எச்சிரிக்கை இது!

விரைவில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகமாக வாய்ப்பு!

English Summary: Budget 2022: Digital Rupee, Learn What It Is and How It Works Published on: 02 February 2022, 05:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.