1. செய்திகள்

டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும், டிஜிட்டல் இந்திய குடிமகன்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Bihar Digital Indian Citizen Asks Begging Digitally!


மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் வசித்து வருகிறார், ராஜூ என்பவர். இவர் சிறுவயது முதலிலிருந்தே, பெட்டியா பகுதியில் யாசகம் எடுத்து வளர்ந்தவர் ஆவார்.

முன்பெல்லாம் யாசகம் கேட்போர் மீது இரக்கப் பட்டு சில்லறையோ அல்லது மக்கள் அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி வந்தனர். ஆனால், தற்போது காலம் மாறி, அனைத்தும் டிஜிட்டல்மயமாக இருக்கும் நிலையில், தான் யாசகம் கேட்கும் முறையையும் மாற்றி, டிஜிட்டல் மயமாக்கியுள்ளார், டிஜிட்டல் இந்தியா குடிமகன்.

அதாவது ராஜூ என்பவர், கூகுள் பே மற்றும் போன் பே, இ-ஸ்கேனிங் அடங்கிய ஃபிளெக்ஸ் கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு யாசகம் எடுக்கிறார். மேலும் அவர் கையில் ஒரு டேப்-யும் (Tab) வைத்துள்ளார். இவர் யாசகம் கேட்கும் போது, யாரேனும் சில்லறை இல்லை என்றால், அவர்களிடம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துமாறு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ராஜூவிற்கு இந்த சிந்தனை எப்படி தோன்றியது? யாசகம் கேட்கும்போது, இவரிடம் சில்லறை இல்லை எனக் கூறி சென்றவர்களால், இந்த சிந்தனை ராஜூவிற்கு வந்துள்ளது என அவர் கூறுகிறார். இதனால் அவர் வங்கிக்குச் சென்று கணக்கையும் தொடங்கியுள்ளார். முதலில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் பல சிக்கல்களை இவர் சந்தித்துள்ளார்.

பொதுவாக வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு, ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும். இவரிடம் ஏற்கெனவே ஆதார் அட்டை இருந்தது, ஆனால், பான் கார்டு இல்லை என்பதால் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பான் கார்டு கிடைத்ததும், அவர் எஸ்பிஐ கிளையில் வங்கி கணக்கைத் தொடங்கியுள்ளார்.

அதன்பிறகு இ-வாலட் தயாரித்து, கியூஆர் குறியீடு கொண்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு யாசகம் எடுக்கத்தொடங்கியுள்ளார். இதனால் அவரது வருமானம் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ராஜூவின் அறிவுத்திறன் குன்றியதால் யாரும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை என்று அவரே குறிப்பிடுகிறார். அன்று முதல் பிச்சை எடுத்து வாழத் தொடங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், தற்போது அவர் டிஜிட்டல் பிச்சைக்காரராக மாறியதால், வருமானமும் அதிகரித்திருக்கிறது. இவர்தான் நாட்டின் முதல் டிஜிட்டல் யாசகர், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ராஜூ தன்னை லாலு யாதவின் தீவிர ரசிகன் எனக் கூறுவது உண்டு. ஒரு காலத்தில், அவர் லாலு யாதவைப் பின்பற்றி, லாலு யாதவின் நிகழ்ச்சிகள் அருகில் எங்கு நடந்தாலும், அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தராம். மேலும், தற்போது ராஜூ, தனது தொழில் முறையை டிஜிட்டல்மயமாக்கி, தன்னை மோடியின் பக்தன் எனவும், டிஜிட்டல் இந்தியா மீது தனக்கு அதிகப் பற்றுள்ளதாகவும் கூறி வருகிறார்.

மேலும் படிக்க:

இ-வாடகை: டிராக்டர், அறுவடை, நடவு இயந்திரங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

வீட்டில் குழந்தைகள் இருந்தால், இந்த செடிகளை வளர்க்கக்கூடாது!

English Summary: Bihar Digital Indian Citizen Asks Begging Digitally! Published on: 08 February 2022, 05:10 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.