இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 October, 2020 11:59 AM IST

சொந்த வீடு கட்ட விரும்புவோரின் கனவை நனவாக்க உதவும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்றத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவு. ஆனாலும் ராக்கெட் வேக விலையேற்றத்திற்கு மத்தியில், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் கனவு நிறைவேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

அனைவருக்கும் வீடு 2022

இந்த சிக்கலைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரையும் சொந்த வீட்டில் அமர வைப்பதற்காகவே பிரதமரின் ஆவாஸ் யோஜனா (Prime Minister Awas Yojana (PMAY)) என்றத் திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது. 2022ம் ஆண்டிற்குள் அனைவரும் வீடு என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு. இதில் இரண்டு பிரிவுகள் உண்டு.

1. பிரதமரின் அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U)

பிரதமரின் அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U) திட்டத்தில் 4,331 போன்ற சிறு நகரங்கள் மற்றும் நகரங்களை கொண்டுள்ளன. நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம், தொழில்துறை மேம்பாட்டு ஆணையம், மேம்பாட்டு பகுதி, ஆகியவற்றின் மூலம், நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.

2. பிரதமரின் அவாஸ் யோஜனா (PMAY-G)

பிரதமரின் அவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) முன்பு இந்திரா அவாஸ் யோஜனா என்று அழைக்கப்பட்டது, மார்ச் 2016-யில் மறுபெயரிடப்பட்டது. டெல்லி மற்றும் சண்டிகர் தவிர்த்து அனைத்து கிராமப்புற இந்தியாவிற்கும் சொந்தவீட்டைக் கட்ட விரும்புபவர்களுக்கு உதவுகிறது.

இதில், பிரதமரின் அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U) திட்டத்தின் கீழ், வீடு வாங்க, அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

காலக்கெடு நீட்டிப்பு (Deadline Extended)

இதுவரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளநிலையில், இந்த திட்டத்தில் இந்த ஆண்டு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து 114 நாட்களில் நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் விரைவில் மானியம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண்களுக்கு அதிகாரம் (Woman power)

குடும்பத்தின் தலைவியாக பெண்கள் உள்ள குடும்பம் அல்லது, கணவன்-மனைவி பெயரில் வீடு வாங்குவது என்பது இத் திட்டத்தின் கீழ் பயனடைய அவசியம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்? (How to apply)

இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Required Documents)

  • பான் அட்டை

  • ஆதார் அட்டை

  • பாஸ்போர்ட்

  • ஓட்டுநர் உரிமம் அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ள அடையாள அட்டை

  • 2 மாத வருமான சான்று (Salary Slip)

  • 6 மாத வங்கி ஸ்டேட்மென்ட்

  • வருமானவரித் தாக்கல்

ஆன்லைனில் விண்ணப்பித்தல் (Apply By Online )

http://pmaymis.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க...

TNAUவில் பாதுகாப்பான மின்னணு பலகை கணிப்பொறி கல்விமுறை அறிமுகம்!

12 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி- ஈஷாவின் சிறப்பு சேவை!

English Summary: PMAY :Central government grant of up to 2.5 lakh to build a house! Extension until March 31!
Published on: 30 October 2020, 11:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now