பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 August, 2020 5:56 PM IST

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. உங்களுக்குப் பணம் வரவில்லை எனில், பின் வரும் உதவி எண்கள் மூலம் இதற்கான விவரங்களை தெரிந்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு 6000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருகிறது . இந்த தொகையானது ஆண்டுக்கு மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 5 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் இதன் 6-வது தவணை கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்த தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 14 கோடி விவசாயிகளைச் சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால், பிரதமர்-கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் தாமதமின்றி பதிவு செய்யலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணையப் பிரதமர் சம்மன் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம் - https://pmkisan.gov.in/

நீங்கள் PM-Kisan பணத்தைப் பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் PM-Kisan திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு ஆறாவது தவணை கிடைக்கவில்லை என்றால், உங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு சில உதவி எண்களை அறிவித்துள்ளது.

  • PM-Kisan Helpline: 155261 அல்லது 1800115526 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைக்கலாம்

  • இது தவிர, வேளாண் அமைச்சகத்தின் 011-23381092 இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்

  • உங்கள் மாவட்ட வேளாண் அலுவலர் அல்லது கணக்காளரையும் தொடர்பு கொள்ளலாம்.

    pmkisan-ict@gov.in-க்கு மின்னஞ்சல் செய்யலாம்

PM-Kisan புதிய பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று Farmers Corner-ல், beneficiary list என்பதை கிளிக் செய்க. தேவையான விவரங்களை நிரப்பவும், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்.
PM-Kisan பட்டியலை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

மேலும் படிக்க...

பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!

LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!

குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!

 

English Summary: You didnt get PM-Kisan money in your bank account Here are the details !!
Published on: 06 August 2020, 05:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now