நோய் வந்தபிறகு மருந்து சாப்பிடுவதைவிட, நோய் வராமல் பாதுகாப்பதில்தான் நம் திறமை உள்ளது. நவீனக் கலாச்சாரத்திற்கு (Modern Culture) மாறுவதாகக் கூறிக்கொண்டு, விலை உயர்ந்த Non-Stick Pan, Tupper ware ஐயிட்டங்கள் என நாம் மாறியதன் விளைவாக, 40 வயதிற்குள்ளாகவே, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், தைராய்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறோம்.
இத்தகைய நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் இயற்கையான முறையில், இந்த நோய்களில் இருந்து விடுபட வழியைத் தேடுவதுமே மிகவும் நல்லது. அந்த வகையில் பழமைக்கு திரும்பும் புதிய யுக்திதான் செம்பு பாத்திரம்.
செம்பு அல்லது தாமிரம் என அழைக்கப்படும், இந்த பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் 10 முக்கிய மருத்துவப் பயன்கள்:
1. சமநிலையில் வாதம், பித்தம், கபம்
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, 24 மணிநேரம் கழித்துப் பருகுவது, நம் உடலில் உள்ள பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றையில் சமநிலையில் வைக்கிறது என்பதை ஆயுர்வேத மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
2.பாக்டீரியா, பூஞ்சைகள் அழிப்பு
செம்பு பாட்டிலில் தண்ணீர் சேமிக்கும்போது, செம்பு தாதுக்கள் சிறிதளவு தண்ணீரில் சேர்கின்றன. அவை குடிநீரைத் தூய்மையாக, மினரல் வாட்டராக (Mineral water) மாற்றுகிறது. ஏனெனில் பாக்டீரியா, பூஞ்சை, போன்ற மைக்ரோஆர்கானிசங்களை (microorganisms) அழிந்துவிடுகின்றன. மேலும் உடலில் பிஎச் (pH) அளவை சமனிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
3. ஏன்டி-ஏஜிங் ஏஜெண்ட்(Anti-Aging Agent)
செம்பின் இயற்கையான குணாதிசயமே, இளமையைத் தக்க வைக்க உதவுவதுதான். இதில் இடம்பெற்றுள்ள ஏன்டி-ஆக்ஸிடன்ட்கள் (anti-oxidant) முகத்தில் தோல் சுருங்குவதைத் தடுப்பதுடன், கருவளையங்கள் உருவாவதையும் அறவேத் தடுக்கிறது. உடல் மற்றும் சருமத்திற்கு சீரான ரத்த ஓட்டத்தை அளிப்பதுடன், தோலுக்கு புதுப் பொலிவையும் கொடுக்கிறது.
4. உடல் எடையைக் குறைக்க (Weight loss)
செம்பு பாத்திரத்தில் சேகரித்த தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால், உடல் எடை கணிசமாகக் குறைந்துவிடும். ஏனெனில், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் தன்மை படைத்தது செம்பு.
5. ஜீரணம் வலுப்படும் (Regulate Digestion)
வயிற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை செம்பு அழித்துவிடும். இதனால், அல்சர், அசிடிட்டி, வாயுத்தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் (ulcers, acidity, gas, indigestion ) சரிசெய்யப்படுகின்றன. மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டையும் செம்புத் தூண்டுகிறது.
6. ரத்தசோகைக்கு மருந்து (Control Anemia)
நம் உடலில் செல்கள் உருவாவது முதல் பல்வேறு செயல்களுக்கு செம்பு மற்றும் இரும்பு அவசியம். அவ்வாறு செம்பு உடலில் சேரும்போது குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் (Anemia) வரவை கட்டுப்படுத்துகிறது.
7. தைராய்டு பிரச்னை தீரும்
தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் அரியக் கனிமம் தாமிரம். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
8. எலும்புக்கு வலிமை (Bone Strength)
செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டது. குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
10.புற்றுநோயைத் தடுக்கும் (Cancer)
செம்பில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் செம்பு பாத்திரத்தில் உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தியும் அதிகமாகும்.
இதைத் தவிர செம்பின் ஏன்டி-பாக்டீரியல் மற்றும் ஏன்டி- வைரல் தன்மைகள், உடலில் ஏற்பட்டுள்ள புண்களை விரைவாகக் குணமடையச் செய்கிறது (Heals wounds faster).
மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலிமையடையச் செய்து, உடலில் புதிய செல்கள் உருவாக வழிவகுக்கிறது.
சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தின் உட்பகுதியை எலுமிச்சை கலந்த தண்ணீர், வினிகர், சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு சுத்தம் செய்துவிட்டு 8 மணிநேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
செம்பு பாட்டில் பயன்படுத்தவதாக இருந்தால், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அதில் உள்ள தண்ணீரைப் பருகுவதன் மூலமே இந்த அத்தனை நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
மேலும் படிக்க...
நீண்ட ஆயுளைப் பெற வாழை இலைக்கு மாறுங்கள்!- நோய்களுக்கும் குட்பை சொல்லலாம்!
மண்பாண்டங்களின் மகத்துவங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம் உங்கள் கையில்!