1. தோட்டக்கலை

புற்றுநோய் வராமல் தடுக்கும் பாலக்கீரை- வீட்டில் வளர்க்க எளிய வழிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: Tamilkadal

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கட்டாயம். அதிலும், நம் வீட்டில் பார்த்து பார்த்து வளர்த்து எடுத்தக் கீரையை ஃபிரஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதில் சிலருக்கு அலாதிப் ப்ரியம்.
அந்த வகையில், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஏற்ற கீரைகள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் கீரை பாலக்கீரை.

பசலைக்கீரை என்று அழைக்கப்படும் இந்தப் பாலக்கீரை, எளிதில் செரிமாணமாகும் கீரைகளில் ஒன்று. உடலுக்கு குளர்ச்சியைத் தருவதுடன், நெஞ்சு எரிச்சலையும் போக்குகிறது.

பூர்வீகம் (History)

ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட பாலக்கீரை மூலிகைச்செடியாகும். தெற்கு ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.

விதைப்பு (Sowing)

பாலக்கீரை சாகுபடியைப் (spinach cultivation) பொறுத்தவரை அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும்.விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சி கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் நோய் தாக்குதல் குறைந்து கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

களை நிர்வாகம்

ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டியது அவசியம். பின்னர் களைகள் அதிகம் வளராதபடி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். முதல் களை எடுக்கும் பொழுது பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் முக்கியம்.

பயிர் பாதுகாப்பு

இக்கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். அதனை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை (Harvesting)

30 வது நாளிலிருந்து இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். 6-8 முறை அறுவடை செய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும்.

Credit: Dinamani

மருத்துவப் பயன்கள் (Medical benefits)

வைட்டமின் A அதிக அளவில் இருப்பதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் பாலக்கீரையை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிடுவது, பால் அதிகம் சுரக்க உதவுகிறது.

மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் K அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கும் துணை நிற்கிறது பாலக்கீரை.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடிய வல்லமை பாலக் கீரைக்கு உண்டு.

இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் தடுக்கும்.

இதன் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் ஏற்படும் இரைச்சலைக் குணப்படுத்தும்.

பாலக்கீரையை ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவுவதால், பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க...

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு

 

English Summary: How to cultivate Palak Keerai Published on: 21 July 2020, 09:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.