கரும்பைத் தாக்கும் பூச்சிகளுள் வேர்புழு மிக முக்கியமானது. இது ஒரு வருடகால வாழக்கைச் சுழற்சியைக் கொண்டது. இதற்கு முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு பருவநிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் புழுப்பருவம் மட்டுமே பயிறைத் தாகக்கூடியது.
பூச்சியின் விபரம்
முட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது. இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும்.
புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C) எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும். கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும்.
கூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும். மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது.
வண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும்.
புழு தாக்கும் காலங்கள்
* ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை
புழு தாக்குதலின் முதல் நிலை அறிகுறி
* முதல் கோடை மழைக்குப் பிறகு வண்டுகள் வெளிவருதல்
தாக்குதலின் அறிகுறிகள்
* கரும்பின் இலைகள் மஞ்சள் நிறமாக மற்றும்
* தீவிர தாக்குதலினால் தூரில் உள்ள அனைத்து பயிர்களும் காய்ந்து விடும்.
* வேர்ப்பகுதி முழுவதுமாக உண்ணப்பட்டிருக்கும்.
* நிலத்தடி தண்டுப்பகுதியில் குழி போன்ற ஓட்டைகள் காணப்படும்.
* பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்.
* பாதிக்கப்பட்ட கரும்புகள் வேரற்று கீழே சாய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்
* முதல் கோடை மழைக்குப் பிறகு வெளிவரும் வண்டுகளை ஒரு வாரத்திற்கு, தொடர்ந்து வேப்பமரம் மற்றும் பெருமரங்களிலிருந்து சேகரித்தல் அழித்தல் நல்லது.
* வண்டுகள் வரக்கூடிய மரங்களில் பூச்சி மருந்துகளை தெளித்தல்
* ஆழமான உழவின் மூலம் நிலத்திற்கடியில் உள்ள கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை வெளிக் கொண்டு வந்து இரையாக்குதல்.
* தாக்கப்பட்ட வயல்களில் நீரைத் தேக்கி நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்து புழுக்களை அழித்தல்.
* ஜூன் - ஜூலை மாதங்களில் பிவேரியா ப்ராங்னியார்டி எனும் பூச்சிக்கொல்லி பூஞ்சாளத்தை ஏக்கருக்கு 1012 ஸ்போர்கள் எனும் வீதத்தில் நிலத்தில் இட்டு பிறகு நீர் பாய்ச்சுதல்.
* மண்ணில் இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் இப்பூஞ்சாளம் மூலம் போதியளவு மேலாண்மையை பெறுவதற்கும், மேற்கூறப்பட்ட பரிந்துறையின் படி தொடர்ந்து வரக்கூடிய வருடங்களிலும் மண்ணில் இட்டு வரலாம்.
* வண்டுகள் வெளிவரும் மே- ஜூன் மாதங்களில் பூச்சிக்கொல்லி நூற்புழுக்களை (EPN) ஏக்கருக்கு 2.5 × 109 குஞ்சுகள் வீதம் தாக்கப்பட்ட வயல்களில் இட்டு பாதுகாப்பை பெறலாம்.
* ஜூன்- ஜூலை மாதங்களில், தேவைப்படும் பொழுது போரேட் குருணை மருந்தினை ஹெக்டேருக்கு 2.5. ஏ. ஐ எனும் வீதத்தில் வயல்களில் இடலாம்.
மேலும் படிக்க:
TNPSC 2022: அலுவலர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!
பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் பெருமிதம்