1. தோட்டக்கலை

இயற்கை பூச்சி விரட்டிகள்- வீட்டிலேயேத் தயாரிக்க டிப்ஸ்!.

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural Insect Repellents - Tips to Make at Home !.

மண்ணை மலட்டுத்தன்மையில் இருந்துப் பாதுகாக்க இயற்கை பூச்சிவிரட்டிளால் மட்டுமே முடியும். அத்தகைய இயற்கைப் பூச்சிவிரட்டிகளை வீட்டில் இருந்தபடி எளிதில் தயாரிக்க முடியும்.

பூச்சிக் கொல்லிகள் (Insecticides)

பூச்சிகளிடம் இருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு காலத்தில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டே, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த அரசும் அனுமதி அளித்தது.

ஆனால், பிற்காலத்தில், அதிக மகசூல் பெறுவதற்காக, அதிகளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக மாற்றிக் கொண்டுவிட்டனர் சில விவசாயிகள்.

மலடாகும் மண்

அவ்வாறு ஒரு பூச்சி கொல்லியைப் பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடுமா? என்றால் முற்றிலுமாக முடியாது. அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிய நிலை உருவாகும். இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும். இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும்.

இயற்கை விவசாயம் (organic farming)

நன்மை செய்யும் உயிரினங்கள் இல்லாத நிலை உருவாகி, சுற்றுசூழல் பாதிக்கப்படும். மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு ஏற்படும். இது வீட்டு மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும்.
இந்தனைப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு, நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம். இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம்.
நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக பூச்சி விரட்டி தயாரிக்கலாம்.

வேப்ப இலை (Neem leaf)

இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான். இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் மற்றும் செடிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை .
இந்த பூச்சிவிரட்டியை 3 முறைகளில் தயாரிக்கலாம்.

  • நுனி வேப்ப இலையை நீர்ல போட்டு அதை செடிகளுக்கு தெளிக்கலாம்.

  • வேப்பங்கோட்டை வைத்து கரைசல் செய்து பயன்படுத்தலாம்.

  • வேப்பஎண்ணெய் அதனுடன் சோப் கலந்து நீங்களே தயாரித்து தெளிக்கலாம்.

உப்புக் கரைசல் (Saline solution)

குறைந்த செலவில் பூச்சியை விரட்டுவதில் முக்கியமானது இந்த உப்புக்கரைசல் மிக சிறந்தது. ஒரு வாளியில் நீரில் உப்பை கலந்து உங்கள் வீட்டுத்தோட்ட செடிகளுக்கு தெளிக்கலாம். இதனைத் தெளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.  மறந்தும் செடிக்கு ஊற்றிவிடக்கூடாது.

வெங்காயம் -பூண்டுக் கரைசல் (Onion-Garlic solution)

வெங்காயத்தையும் , பூண்டையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள் அதில் தண்ணீர் சேருங்கள். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து காலையில் வையுங்கள் . மாலையில் பூச்சி விரட்டி தயாரிகிவிடும் . இதன் வாசம் பூச்சிகளை செடிகளிடம் நெருங்கவிடாது .

சாமந்திப் பூ

இந்த பூவில் பைரந்திரம் என்ற இயற்கையான வேதிப்பொருள் உள்ளது. வேப்பெண்ணை கரைசல் தெளிக்கும்போது அது பூச்சிகளின் இனப்பெருக்கப் பகுதியைத் தாக்கி முட்டையிடாதபடி செய்யும். ஆனால் இந்த சாமந்தி பூக் கரைசலைத் தெளிக்கும்போது அது நரம்பு மண்டலத்தைத் தாக்கி பூச்சிகளையோ புழுக்களையோ உடனடியாகக் கொன்றுவிடும்.

காய்ந்த சாமந்திப் பூக்களை எடுத்துக்கொண்டு. நீரில் பூட்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு, சூடுக் குறைந்தப் பின்பு பாட்டிலில் போட்டு தெளிக்கலாம். இதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து தெளிக்கும்போது நல்ல பலன் தரும்.

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

English Summary: Natural Insect Repellents - Tips to Make at Home !. Published on: 08 October 2021, 10:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.