1. விவசாய தகவல்கள்

வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Beautiful Mango Tree

தற்போது தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்து, பல்வேறு வகையான மாம்பழங்கள் சந்தைக்கு வர துவங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற செந்தூரம், கிளிமூக்கு, மல்கோவா, பங்கனபள்ளி ரகங்கள் விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகள் மாபழங்களை பெருமளவில் தாக்கும், வருமான இழப்பை ஏற்படுத்தும், பழ ஈ மற்றும் மாங்கொட்டை வண்டினை கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை தோட்டக்கலை துறையினர் வழங்கியுள்ளனர். 

வண்டுகள் மற்றும் ஈக்கள் மேலாண்மை

பொதுவாக வண்டுகள் மற்றும் ஈக்கள் ஆகிய இரண்டும் மரத்தை வெவ்வேறு தருணத்தில் மரத்தை தாக்கி இழப்பை ஏற்படுத்துக் கின்றன.  மாங்கொட்டை துளைப்பான் வண்டுகள், மரங்களில் காய்கள் வர துவங்கும் தருணத்தில் இருந்து முட்டைகள் ஈடும். முட்டைகளில் இருந்து மெல்ல புழுக்கள் வெளி வந்து காயை துளைத்து வளர தொடங்கும். இவற்றை அழிக்க லேம்டாசைக்ளோதிரின் என்னும் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மி.லி.,என்ற வீதம் தண்ணீரில் கலந்து இதனை தெளிக்கலாம்.

பழ ஈக்கள் முதிர்ந்த காய்கள் அதாவது பழுக்கும் தருணத்தில் காய்கள் மீது முட்டையிடும். இவை தோற்றத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவந்தவுடன் பழத்தின் சதைப் பகுதியை துளைத்து வளர தொடங்கும். பழ ஈ தாக்கப்பட்ட பழங்கள் வெளிறிய மஞ்சள் நிறத்தில், நடுப் பகுதி கறுப்பாக புள்ளி போன்று இருக்கும். நாட்கள் செல்ல செல்ல ஈக்களின் தாக்கத்தால் பழம் முழுவதும் அழுகி தானாக மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து விடும். எனவே விவசாயிகள் முதல் கட்டமாக இப்பழங்களை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். எனவே விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கள் முதிர்ச்சி அடையும் காலத்தில் மாலத்தியான் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 – 4 மி.லி., வீதம் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த இயலும்.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மாம்பழம் பரவலாக சாகுபடியாகிறது.  திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வத்தலக்குண்டு, நத்தம், பழநி பகுதிகளில் மட்டும் 2 விவசாயிகள் மேலே கூறிய முறைகளை பின்பற்றி பொருளாதார இழப்பை தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டனர். ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடியாகிறது. எனவே விவசாயிகள் மேலே கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி பொருளாதார இழப்பை தவிர்க்கும் படி கேட்டுக்கொண்டனர். 

English Summary: Do You Know How to Treat Bugs And Fruit Fly on a Mango Tree? Listen Experts Advice Published on: 06 May 2020, 02:11 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.