தமிழகத்தின் விதைப்புக்காலமும், பயிரிடப்படும் பயிர்களும்

Thursday, 20 August 2020 07:49 AM , by: Elavarse Sivakumar

பயிர்சாகுபடியைப் பொருத்தவரை பருவமே பிரதானமாகப் பார்க்கபடுகிறது. எனினும் பல்வேறு மாவட்டங்களில் மண்வளத்திற்கு ஏற்றக் குறிப்பிட்ட பயிர்சாகுபடிக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

விதைப்பு காலம் (Sowing)

தமிழகத்தின் விதைப்பு காலம் காரீப், ராபி எனப் பருவங்களாகக் கருதப்பட்டாலும், அவை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.

முன் காரீஃப் பருவம் (Kharif Season)

ஏப்ரல் முதல் மே (சித்திரைப்பருவம்)

காரீஃப் பருவம் (Before Kharif)

ஜூன் , ஜூலை

பின் காரீஃப் (After Kharif)

ஆகஸ்ட் செப்டம்பர்

ராபி பருவம் (Rabi Season)

அக்டோபர் முதல் டிசம்பர் வரை (புரட்டாசி பட்டம்)

காரீஃப் (Kharif)

காரீஃப் என்பது சம்பா பருவகாலம் அல்லது மானாவாரி பயிர் காலம் எனப்படும். இது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. பொதுவாக சம்பா பயிர்கள், தென்மேற்கு பருவமழை காலத்தில், ஆடி மாதத் தொடக்கத்தில் விதைக்கப்படுகின்றன.
இந்த மானாவாரி பயிர்களானது மழைநீர் அளவையும், அந்த மழை பெய்யும் காலத்தையும் நம்பியுள்ளன.

சம்பா பயிர்கள் (Kharif Crops)

நெல்,சோளம்,சிறுதானியம், மக்காச்சோளம், சோயா அவரை, மஞ்சள்,வேற்கடலை, பருத்தி, கரும்பு, பாகல், பாசிப் பயறு, துவரை,உளுந்து, காராமணி ஆகியவை சம்பா பயிர்களாகும்.

ராபி பருவம் (Rabi Season)

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டமே ராபி பருவம். இதனை குறுவை சாகுபடி பருவம் என்பர். குளிர்காலத்தில் விதைப்பு தொடங்கி இலையுதிர்காலத்தில் அறுவடை நடைபெறும்.

ராபி பயிர்கள் (Rabi Crops)

குறுவை பயிர்களில் காய்கறிகள் என எடுத்துக்கொண்டால் காய்கறிகள் பட்டாணி, கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தானியங்களில் கோதுமை, காடைக்கண்ணி, வாற்கோதுமை, ஆகியவை பயிரிடப்படும்.
விதைத் தாவரங்கள் என எடுத்துக்கொண்டால், குதிரை மசால், ஆளி, எள், சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவை குறுவை காலத்தில் பயிரிடப்படும்.

எனினும் இவ்விரு பருவங்களிலும் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர்கள் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில், அந்தந்த மாவட்டத்தின் மண்வளம், சீதோஷணநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

அவ்வாறு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பயிர்காப்பீடு வழங்கப்படுகிறது. இதைத்தவிர பிற மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்ய முடியாது.

இதேபோல், பிற பயிர்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் காப்பீடு செய்ய முடியும் என்பது பட்டியலிப்பட்டுள்ளது.

நெல் (Paddy)

தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை

மக்காச்சோளம் (Corn)

தேனி, திண்டுக்கல், அரியலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம்

துவரம் பருப்பு (Toor Dal)

அரியலூர், தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை

உளுந்தம் பருப்பு (Urid Dal)

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவள்ளூர், கோவை

பச்சை பருப்பு (Mong Dal)

சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவள்ளூர், கோவை

நிலக்கடலை (Peanut)

சேலம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை

கம்பு (Rye)

தேனி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர்

எள் (Sesame)

தேனி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கோவை

பருத்தி (Cotton)

சேலம், தூத்துக்குடி,

கேழ்வரகு (Raagi)

தர்மபுரி

தட்டை பயிறு ( Cowpea)

சேலம்

சூரியகாந்தி (SunFlower)

தேனி

சாமை (Little Millet)

திருவண்ணாமலை, தர்மபுரி

கொள்ளு (Horse Gram Dal)

கோவை

தமிழகத்தின் விதைப்பு பருவம் காரீஃப் பருவம் Crops Cultivated in Tamilnadu Sowing season
English Summary: Sowing season and cultivated crops in Tamil Nadu

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.