கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் (TNAU) முதுநிலை பட்டப்படிப்பில் 32 துறைகளுக்கும், முனைவர் பட்டப்படிப்பில் 29 துறைகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கையைத் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் தொடங்கிவைத்தார்.
இதில் முதுநிலை பாடப்பிரிவுகளில், வேளாண் பொருளியல், வேளாண் பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், பயிர் வினையியல், மரபியல் உட்பட 32 துறைகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதேபோல் முனைவர் பட்டப்படிப்புகளான வேளாண் பொருளியல், வேளாண் பூச்சியியல், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், பயிர் வினையியல், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், மண்ணியல், வேளாண் வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், சமுதாய அறிவியல் உள்பட 29 துறைகளுக்கும் மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்துகொள்ள www.admissionsatpgschooltnau.ac.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0422-6611261, 0422-6611461 என்ற தொலைபேசி உதவி எண்களை அனைத்து வேலை நாட்களில் காலை 9மணி முதல் மாலை - 5 மணி வரைத் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2020 நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 12.01.2021.
மேலும் படிக்க...