1. செய்திகள்

சிறந்த வேளாண் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு! - தமிழ்நாட்டின் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு 8வது இடம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 33வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்தியாவில் உள்ள 67 வேளாண்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கான 2019-ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (Indian counsil of agriculture research) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 வேளாண்துறை சார்ந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் 3 இடங்கள்!

ஹரியானா மாநிலம் கர்ணலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையம் முதலிடத்திலும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் 2வது இடத்திலும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண்துறை ஆராய்ச்சி நிலையம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

33லிருந்து 8வது இடத்திற்கு முன்னேறிய தமிழ்நாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) 8வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் 22வது இடத்தையும், நாகபட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் 54வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 33வது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டால் பல்கலைக்கழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், பல்கலைக்கழகத்தைப் பற்றிய பொதுவான மதிப்பீடும் கருத்தும் பாதிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் குறிப்பிட்டிருந்தார்.

நம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள 67 வேளாண் பல்கலைக்கழகங்களில் 8வது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே முதலிடத்தையும் பெற்றுள்ளது.

PM Kisan : டிசம்பர் 10 முதல் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 பணம் வரவு?

ICAR வெளியிட்ட 2019ம் ஆண்டின் வேளாண் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்!

1. ஐ.சி.ஏ.ஆர்-தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையம், கர்னல்

2. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா

3. ஐ.சி.ஏ.ஆர்-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம், டெல்லி

4. ஐ.சி.ஏ.ஆர்-இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையம், இசாத்நகர்

5. ஜிபி பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பந்த்நகர்

6. சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம், ஹிசார்

7. குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம், லூதியானா

8. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை

9. வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாட்

10. பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

11. டாக்டர். யஸ்வந்த் சிங் பர்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், நவுனி-சோலன்

12. ஷெர்-இ-காஷ்மீர் காஷ்மீரின் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீநகர்

13. ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகம், குண்டூர்

14. ச. சர்வன் குமார் கிருஷி விஸ்வத்யாலயா, பாலம்பூர்

15. பிதன் சந்திர கிருஷி விஸ்வத்யாலயா, மோகன்பூர்

16. ஐ.சி.ஏ.ஆர்-மத்திய மீன்வள கல்வி நிலையம், மும்பை

17. சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மீரட்

18. வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு

19. கேரள வேளாண் பல்கலைக்கழகம், திருச்சூர்

20. ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், புவனேஸ்வர்

21. வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ரைச்சூர்

22. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை

23. இந்திரா காந்தி கிருஷி விஸ்வத்யாலயா, ராய்ப்பூர்

24. ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்

25. மத்திய வேளாண் பல்கலைக்கழகம், இம்பால்

26. மஹாராணா பிரதாப் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உதய்பூர்

27. மகாத்மா பூலே கிருஷி வித்யாபீத், ராகுரி

28. லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், ஹிசார்

29. மகாராஷ்டிரா விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், நாக்பூர்

30. ஜுனகத் வேளாண் பல்கலைக்கழகம், ஜுனகத்

31. ஜவஹ்ரலால் நேரு கிருஷி விஸ்வ வித்யாலயா, ஜபல்பூர்

32. சுவாமி கேஷ்வானந்த் ராஜஸ்தான் வேளாண் பல்கலைக்கழகம், பிகானேர்

33. ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகம், ஹைதராபாத்

34. டாக்டர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் வெங்கடரமன்னகுடம், மேற்கு கோதாவரி

35. வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம், சிவமோகா

36. டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம், சமஸ்திபூர்

37. ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜம்மு

38. டாக்டர். பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத், அகோலா

39. கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், வயநாடு

40. தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம், பாகல்கோட்

41. வசந்த்ராவ் நாயக் மராட்டாவாட கிருஷி வித்யாபீத், பர்பானி

42. நவ்சரி வேளாண் பல்கலைக்கழகம், நவ்சாரி

43. சந்தர் சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர்

44. ராஜஸ்தான் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், பிகானேர்

45. சர்தார் கிருஷினகர் டன்டிவாடா வேளாண் பல்கலைக்கழகம், சர்தர்கிருஷினகர்

46. ​​மேற்கு வங்கம் விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா

47. நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஜபல்பூர்

48. பீகார் வேளாண் பல்கலைக்கழகம், பாகல்பூர்

49. அசாம் வேளாண் பல்கலைக்கழகம், ஜோர்ஹாட்

50. ராஜ்மதா விஜயராஜே சிந்தியா கிருஷி விஸ்வ வித்யாலயா, குவாலியர்

51. டாக்டர். பாலாசாகேப் சாவந்த் கொங்கன் கிருஷி வித்யாபீத், தபோலி

52. வேளாண் பல்கலைக்கழகம், கோட்டா

53. ஸ்ரீ கரண் நரேந்திர வேளாண் பல்கலைக்கழகம், ஜாப்னர்

54. தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

55. உத்தர பாங்க கிருஷி விஸ்வத்யாலயா, கூச்ச்பெஹார்

56. யு.பி. பண்டிட். தீன் தயால் உபாத்யாய பாஷு சிக்கிட்சா விஜியன் விஸ்வ வித்யாலயா ஈவ்ம் கோ அனுசந்தன் சன்ஸ்தான், மதுரா

57. கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழகம், பனங்காட்

58. பண்டா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பண்டா

59. சத்தீஸ்கர் காம்தேனு விஸ்வவித்யாலயா, துர்க்

60. பிர்சா வேளாண் பல்கலைக்கழகம், ராஞ்சி

புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அமைச்சர் தகவல்!

61. ஆச்சார்ய நரேந்திர தேவா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அயோத்தி

62. கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், பிதர்

63. வேளாண் பல்கலைக்கழகம், ஜோத்பூர்

64. ஸ்ரீ வெங்கடேஸ்வர கால்நடை பல்கலைக்கழகம், திருப்பதி

65. உத்தரகண்ட் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், பார்சர்

66. பீகார் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், பாட்னா

67. பி.வி. நரசிம்மராவ் தெலுங்கானா கால்நடை பல்கலைக்கழகம், ஹைதராபாத்


English Summary: TNAU secured 8th rank in the ICAR ranking for the year 2019 Check top List of Agricultural Universities here Published on: 08 December 2020, 04:18 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.