சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிப்பு குறைகிறது (The vulnerability decreases)
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸின் 2-வது அலை, அரசின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், படிப்படியாகக் குறைந்து வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு (Curfew extension)
கடந்த மாதம் 30 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, தற்போது 5 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம் என்பதால், அரசும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.
3 மாவட்டங்களில் (In 3 districts)
இந்நலையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
9 பேருக்கு பாதிப்பு (Injury to 9 people)
தமிழ்நாட்டில் மொத்தம் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
மத்திய அரசு கடிதம் (Federal Government Letter)
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
டெல்டா பிளஸ் (Delta Plus)
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
எச்சரிக்கை (Warning)
இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும்.
கடைப்பிடிக்க வேண்டியவை (Things to follow)
-
குறிப்பாக, மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
-
பரவலான கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
வேகமாகப் பரவும் (Spread fast)
தற்போது கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும்.
கடும் பாதிப்பு (Severe damage)
டெல்டா பிளஸ் கொரோனா, நுரையீரலைக் கடுமையாக பாதித்து உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.
தனிமைப்படுத்துதல் (Isolation)
-
ஆகையால், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டைப் போன்றே டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ள குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அரியானா ஆகிய மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க...
சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?
85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!