1. செய்திகள்

3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

T. Vigneshwaran
T. Vigneshwaran

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் குறித்த அச்சங்கள் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் முறைப்படுத்தி வருகிறது.

டெல்டா பிளஸ் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொது அவர் "தமிழகத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன.அதிலிறுந்து 1100 மாதிரிகளில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில், சென்னை கொரட்டூர் பகுதியிலிருந்து ஒருவர், காஞ்சிபுரத்திரத்திலிருந்து ஒருவர், மதுரையை சேர்ந்த ஒருவரும் இருப்பதாக அவர் கூறினார். இந்த நபர்களுடன் தொடர்பு கொண்டர்வர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது, அவர்களில் யாருக்கும் டெல்டா தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

டெல்டா பிளஸ் வகை பாதிப்பு ஏற்பட்ட அனைவரின் நிலைமையும் சீராக உள்ளது என்று அமைச்சர் கூறினார். மதுரையில் பாதிக்கப்பட்ட்டவர் சிகிச்சை பெற்று, குணமாகி வீடு திரும்பி விட்டார் என்பது ஒரு நிம்மதியான விஷயம். மீதமுள்ள இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

டெல்டா பிளஸ் வகை போன்ற வைரஸ் பரிசோதனைகளை செய்ய, நாட்டில் மொத்தம் 14 இடங்களில் மட்டுமே பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பிதான் பரிசோதிக்க வேண்டி அவசியம் உள்ளது. மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவு வர அதிக நேரம் ஆகிவிடுகிறது.

 

அவையெல்லாம் எடுத்துக்கூறிய அமைச்சர் சுப்பிரமணியம், சென்னையிலேயே இதற்கான ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். டெல்டா பிளஸ் வகை போன்ற வைரஸ் மாதிரிகளை கண்டறியக் கூடிய, அதிநவீன வசதிகளுடன் கூடிய  பரிசோதனை மையங்கள் சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசிடம் இந்த பரிசோதனை மையங்களுக்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் மே்கூறினார். அனுமதி கிடைத்தவுடன் விரைவிலேயே சென்னையில் இதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்படும். அதன் மூலம் நோய் கண்டறிதலில் ஏற்படும் கால தாமதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உலகம் முழுவதிலும்  டெல்டா பிளஸ்  வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11 நாடுகளில் 200 பேருக்கும் மேல் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:

சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?

85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

English Summary: Delta Plus type corona confirmed for 3 persons - Minister M.Subramanian Published on: 25 June 2021, 03:58 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.