1. செய்திகள்

85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Delta Virus
Credit : Dinamalar

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் நிலையில், தற்போது டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என, உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

உருமாறும் கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கோவிட் வைரசால் (Covid Virus) 17 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்து உள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கோவிட் வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

டெல்டா வைரஸ் பரவல்

இதில் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் (Delta Virus) அதிக தொற்று பரவல் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும், டெல்டா வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே வேகம் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தும். தற்போது இந்த வகை வைரஸ் சுமார் 85 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சூப்பர் வாக்சின்

டெல்டா வகை கொரோனா, டெல்டா பிளஸ் வகை கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் 'சூப்பர் வாக்சின் (Super Vaccine)' தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், இந்த மருந்து தடுப்பாற்றலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இம்மருந்து அடுத்தாண்டு மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்

ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

English Summary: Delta virus spreads in 85 countries! World Health Organization Info! Published on: 24 June 2021, 07:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.