FPO என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு ஆகும். இது விவசாயத்தை அமைப்பு சாரா துறையிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றும். ஆனால் FPO அமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களால் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான ஊடகங்கள் இதுவரை பெரிதாக இல்லை. ஆனால், தற்பொழுது கிரிஷி ஜாக்ரனால் ஜனவரி 24 முதல் அதிகாரப்பூர்வமாகக் கிரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?
அனைத்து வகையான FPO தொடர்பான சேவைகளுக்கும் அதாவது பதிவு, சட்டம், நிதி, வங்கி தொடர்பான பிரச்சனைகளுக்கு கால் சென்டர் KVK, SMS மூலம் ஆலோசனைகளை FPOக்கள் வழங்கும். KVK-கள், மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடப் பொருள் வல்லுநர்கள் (SMS) கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு கேள்விகளைத் தீர்க்கும் குழுவாகச் செயல்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!
க்ரிஷி ஜாக்ரானுடன் இணைந்து, AFC இந்தியா லிமிடெட் இந்தியாவின் முதல் FPO கால் சென்டரை 24 ஜனவரி 2023 அன்று (செவ்வாய்கிழமை) தொடங்க உள்ளது. அதிக உழவர்-உற்பத்தி நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் காரணமாக இந்திய விவசாயத் துறையின் வளர்ச்சியை வைத்து காணும்போது, FPO-க்கள் வளர அதிக நேரம் எடுக்கும்.
FPO கால் சென்டர் எப்படி வேலை செய்யும்?
FPO அழைப்பு மையம் FPO-களிலிருந்து அனைத்து வகையான அழைப்புகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா எண்- 1800 889 0459 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
FPO/ கூட்டமைப்பு/ ஒத்துழைப்பு எண்ணை டயல் செய்த பிறகு, அழைப்பு வாடிக்கையாளரின் பிராந்திய மொழிக்கு மாற்றப்படும்.
கால் சென்டர் மூலம் தரவு பெறப்பட்டு அடிப்படைத் தகவல்களைக் கேட்கும். பின்னர் அழைப்பு பொருத்தமான நிபுணருக்கு மாற்றப்படும்.
வினவல் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றால், சிறந்த தீர்வை வழங்க AFC மற்றும் SAU இன் வினவல் தீர்மானக் குழு உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி, தெலுங்கு, தமிழ், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி மற்றும் ஒரியா உள்ளிட்ட 12 மொழிகளில் FPO கால் சென்டர் வசதி இந்தியா முழுவதும் கிடைக்க இருக்கிறது.
மேலும் படிக்க