+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தமிழகத்தில் அரசு, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இணைய ஆன்லைன் வாயிலாக ஜூன் 22 முதல் விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்து அனுப்பலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
+2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டது. அந்த முடிவில் 93.76 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்த நிலையில் தமிழகம் முழுவது உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 22 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பிக்க முனைப்புக் காட்டி வந்தனர்.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளடக்கிய இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இணையம் வாயிலாக விண்னப்பிக்கலாம் என உயர்க்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது, தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்குக் கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 163 கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதே போன்று பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் அதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!