இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வீசி வரும் நிலையில், பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத்தொடர்ந்து கொரோனா 2-வது அலை தமிழகத்திலும் தீவிரம் அடைந்துவருகிறது.
10ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் (Restrictions from the 10th)
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகும் நிலை தொடர்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு ஏப்ரல் 10ம் தேதி முதல், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தைத் தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
முதியவர் நலன் (Elderly welfare)
பொது மக்கள் அனைவரும் தங்களது குடும்பம் மற்றும் முதியவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
சமூக இடைவெளி (Social space)
மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் (Mask)அணிவதுடன், சமூக இடைவெளியை (Social Distance) கடைப்பிடிப்பதுடன் அடிக்கடி கைகளைக் கழுவ (Frequent Hand Wash) வேண்டும்.
தடுப்பூசி (Vaccine)
தகுதியானவர்கள், கொரோனாத் தடுப்பூசியைத் தாமதிக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு (People's cooperation)
கொரோனாவைக் கட்டுப்படுத்தக் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதற்கு மக்கள் அளித்துவரும் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது.
போராடும் சூழல் (Fighting environment)
கொரோனாவுக்கு எதிராக போராடும், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமானால், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆளுநர் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க...
மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!