News

Sunday, 10 July 2022 04:56 PM , by: Poonguzhali R

Hall ticket for NEET exam from tomorrow!


இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரவிருக்கின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதைக் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: ஓய்வூதியர்களுக்குச் அடுத்த மகிழ்ச்சியான செய்தி! சூப்பர் வசதி!

தற்பொழுது நீட் தேர்வு என்பது இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு என நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

NEET (UG) 2022 தேர்வு ஜூலை 17 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. மருத்துவ இளநிலை பட்டத்திற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஏறக்குறைய 18 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் குறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?

எவ்வாறு ஹால்டிக்கெட் பெறுவது?

  • அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கலாம்.
  • அங்கு, ADMIT CARD NEET (UG) -2022″ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • அதன் பின்பு பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் உள்ளிட வேண்டும்.
  • அதன் பின்னர் உள்நுழை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • NEET (UG) 2022 அனுமதி அட்டைகள் (ஹால் டிக்கெட்) திரையில் வரும்.
  • அதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:  IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

தேர்வு ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதில் அல்லது சரிபார்க்கும் போது ஏதேனும் சிக்கல் வரும் நிலையில் விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!

இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)