தொடர்ந்து வரும் கொரோனோ தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேனியில் பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார் தேனி மாவட்ட ஆட்சியர். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. முரளிதரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதோடு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு விடுதிகளில் வேலை! இன்றே விண்ணப்பியுங்க!!
இந்த கூட்டங்களில் பேசிய தேனி ஆட்சியர், தமிழக அரசு வழிகாட்டுதல்படி தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றுப் பரவாமல் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது ரூ.500 அபராதம் விதித்திட வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 31வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!