1. செய்திகள்

சென்னையில் பிளாஸ்டிக் தடை தீவிரம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

Poonguzhali R
Poonguzhali R
Plastic ban in Chennai intensified

பிளாஸ்டிக் தடை குறித்து விரைந்து ஆலோசித்து, முடிவுகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கென தனியான கட்டுபாட்டு அறையினை அமைக்கவும் உத்தரவு இட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கீழ்வரும் தகவல்கள் இடம்பெறுகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு அந்த பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவுப் பொருட்களைக் கட்டுவதற்கு உபயோபடுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக் கெட்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் முதாலானவைகளைச் செய்ய 1.1.2019 முதல் தடை விதித்துத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இதன் அடிப்படையில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையினைத் திறம்படச் செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்குகின்ற வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்திருக்கின்றது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறை அனைத்து அலுவலக நாட்களிலும் வரும் 31.7.2022 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

English Summary: Plastic ban in Chennai intensified: Tamil Nadu Pollution Control Board! Published on: 08 July 2022, 02:16 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.