News

Sunday, 06 December 2020 08:15 AM , by: Elavarse Sivakumar

Credit: Polimer News

சர்க்கரை குடும்ப அட்டைதார்களின் வேண்டுகோளை ஏற்று, அதனை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள வரும் 20ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர். ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

  • பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 5.80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன.

  • இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, முதலமைச்சர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

  • சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து, வரும்20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.

  • இதுதவிர, சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

  • அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் (Sugar Option Family Cards), தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக (Rice Option Family Cards) மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் பல நலத்திட்ட உதவிகளை அரிசி குடும்ப அட்டைதார்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)