News

Sunday, 22 August 2021 04:03 PM , by: Elavarse Sivakumar

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கத் திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தணிக்கை (Audit)

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கடந்த 4 ஆண்டுகால (2017-18 முதல்) ஊரக வேலைதிட்ட அமலாக்கம் பற்றி அண்மையில் தணிக்கை நடத்தப்பட்டது.

குறிப்பாக 2017-18ம் நிதி ஆண்டில் மத்தியஅரசு இந்த திட்டத்துக்கு ரூ.55,659 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,10,355 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.935 கோடி முறைகேடு (Rs 935 crore misappropriation)

மொத்த நிதி ஒதுக்கீடு அதிகரித்து வந்த நிலையில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தணிக்கையில் வெளியாகியுள்ளது.

மரணமடைந்தவர்கள் பெயரில் (In the name of the deceased)

லஞ்சம் மற்றும் உயிருடன் இல்லாதவர்களுக்கு பணம் அளித்ததாக கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ரூ.12.5 கோடி (Rs 12.5 crore)

இதுதவிர அதிக விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்ததும் தெரியவந்துள்ளது. இதில், ரூ.12.5 கோடி அளவிலான தொகை மட்டுமே வசூலாகியுள்ளது. இது மொத்த தொகையில் 1.34% ஆகும்.

தமிழகத்தில் மிக அதிகளவாக ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில், 0.85% தொகை அதாவது ரூ.2.07 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது. 

பதவிநீக்கம் (Dismissal)

இது தொடர்பாக ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்- சட்டசபையில் இன்று தாக்கல்!

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)