
தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கை மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வரும் நாட்களில், வானிலை நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இன்று 25-04-2022: தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
26-04-2022: திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்களும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழிய வாய்ப்பு.
100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?
27.04.2022: திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்களும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது மழை பெய்யக்கூடும்.
28.04.2022 மற்றும் 29.04.2022: கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?
சென்னைக்கான வானிலை நிலவரம் (Weather conditions for Chennai):
அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு: அரசு வேண்டுகோள்
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்