1. செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்குத் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு !!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில்  உள்ள பாசனத்திற்காக வருகிற ஜூன் மாதம் 8-ந் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேளான் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுத் தண்ணீர் திறக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அணைகள் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 8.6.2020 முதல் 28.2.2021 வரை நாள் ஒன்றுக்கு விநாடிக்கு, 850 கன அடி தண்ணீர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தர் 1 மற்றும் 11 அணைகளிலிருந்து திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், மேலும் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டும் என்றும் தனது அறிக்கையின் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

English Summary: Tamil Nadu Chief Minister Edappadi K Palanisamy has ordered to open water for irrigation in Kanyakumari district on June 8th Published on: 27 May 2020, 10:01 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.