Others

Wednesday, 18 January 2023 01:06 PM , by: Poonguzhali R

Action offer on Flipkart! iPhone 14 Rs.10 thousand reduction!!

ஐபோன் 14 குறைந்த விலையில் Flipkart இல் விற்கப்பட்டு வருகின்றது. ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையினை அதன் இணையதளத்தில் நடத்திக் கொண்டு வருகின்றது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

சூப்பர் டூபர் ஆஃபரில் நிறுவனம் ஐபோன் 14 ஐ ரூ. 10,000 நேரடி தள்ளுபடியில் விற்பனை செய்கின்றது. பிற நாட்களில் ரூ.79,900க்கு விற்கப்படும் ஐபோன் தற்பொழுது பிளிப்கார்ட்டில் ரூ.66,999க்கு வாங்கலாம். மேலும், சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயனர்களுக்கு 10% தள்ளுபடியையும் பிளிப்கார்ட் வழங்குகின்றது. இதில் EMI திட்டமும் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க: சிறப்பான ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்கள்! இன்றே அப்ளை பண்ணுங்க!!

எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.22,000 வரை தள்ளுபடி இருக்கிறது. Flipkart இல் iPhone 14 66,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்றாலும், பரிமாற்றத்தின் சலுகை அனைத்துப் பகுதியின் பின் குறியீட்டினைப் பொறுத்தது எனக் கூறப்படுகிறது. இது எல்லா பகுதிகளுக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் வங்கிச் சலுகை அல்லது பரிமாற்றச் சலுகை எதுவும் இல்லை. தகுதியான கார்டு உங்களிடம் இருந்தால் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். அந்த வகையில், தகுதியான கார்டு உங்களிடம் இருந்தால் கூடுதல் தள்ளுபடிகளைப் பெற வசதியாக இருக்கலாம். இதைப் பெற ஐசிஐசிஐ வங்கி அட்டை அல்லது சிட்டி வங்கி அட்டை இருந்தால், ஸ்மார்ட்போனில் ரூ.1000 தள்ளுபடி பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் பொருள் நீங்கள் ஐபோன் 14 ஐ ரூ.65,999 என்ற விலைக்கு வாங்கலாம். அதோடு, இதற்கு ஈடாக உங்கள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸைக் கொடுத்தால் ரூ.20,350 வரை பெறலாம். வரவிருக்கும் Samsung Galaxy S23 க்கும் அதிரடி ஆஃபர் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க

தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)