இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் 10 பேரில் 4 பேர், பணியிட சூழல் காரணமாக அதிகளவில் சோர்வு, கவலை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை உணர்வதாக மெக்கின்சி நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
பணியாளர் மனநலம் (Employee Mental Health)
பணியாளர் மனநலம் மற்றும் சோர்வு - செயல்பட வேண்டிய நேரம் என்ற தலைப்பில் பணியாளர்கள் மத்தியில் சர்வதேச கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி ஹெல்த் இன்ஸ்டியூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த, 15,000 பணியாளர்கள், 1,000 மனித வள மேம்பாட்டு அலுவலர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், பல பணியாளர்கள், எரிச்சல், துன்பம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பதிலளித்த 10 பேரில், 4 பேர் இதன் அறிகுறிகளுடன் காணப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த பணியிடமே முக்கிய காரணம் என 90 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மேலும், பணியிட சூழலில் காணப்படும் நடத்தை தான் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு எடுப்பதற்கு 90 சதவீதம் காரணமாக அமைகிறது. இந்தியாவில் பணியாளர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தை, உலகளாவிய சராசரியோடு ஒப்பிடுகையில், சுமார் 60 சதவீதம் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க
இயர்போன் பயன்படுத்தினால் மூளைக்கு ஆபத்து: எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!
டிஜிட்டல் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?