மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி

This Workshop will be organized from 12 Mar, 2020 10:03 to 12 Mar, 2020 05:00
Value Added Products from Milk

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாதம்தோறும் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயருவதுடன், புதிய தொழில்நுட்பங்கள் எளிதில் அறிந்து கொள்ளவும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் உதவியாக உள்ளது. இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், தொழில்முனைய விரும்புவோர்,  ஊரக மகளிர், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளலாம்.

பெரும்பாலான கிராமப்புற மக்களின் உபத் தொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு ஆகும். இதில் ஈடுபட்டுள்ளவர்கள் பால் விற்பனையில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றிலிருந்து மதிப்பூட்டிய பால் பொருட்களை தயாரித்து கணிசமான லாபம் பெறலாம் என்பதை குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், பாலில் அடங்கியுள்ள பல்வேறு சத்துப்பொருட்கள், பாலிலிருந்து  உற்பத்தி செய்படும் ஐஸ் கிரீம், பால்கோவா, வாசனை பால் (ரோஸ் மில்க், கேரட் மில்க், பாதம் மில்க்) குலோப்ஜாமுன், ரசகுல்லா, பனீர் மற்றும் மசாலா மோர் தயாரித்தல் மற்றும் அவற்றை சந்தை படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி விவரம்

நடைபெறும் நாட்கள்: 12.03.2020 வியாழக்கிழமை

நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

நடைபெறும் இடம்: உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 044-27264019

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொண்டுவந்து ஆதார் எண்ணை மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.