லட்சக்கணக்கான பால் சங்கங்களிடம் (Milk Associations) இருந்து பெறப்பட்ட கடன் விணணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, 2020ம் ஆண்டு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.:
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (Animal Care Infrastructure Development Fund)
தற்சார்பு இந்தியா தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 15,000 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி அமைக்கப்படும். இதில் பால்வளம், இறைச்சிப் பதனிடுதல் மற்றும் மதிப்புக் கூட்டல் (Value Added things) உள் கூட்டமைப்பில் செய்யப்படும் முதலிடுகளுக்கும்(Investments) , தனியார் துறையில் விலங்குத் தீவன ஆலையை நிறுவுவதற்கும் நிதி அளிக்கப்படும். இதற்கு தகுதியான பயனாளிகளுக்கு 3 சதவீதம் வட்டித் தள்ளுபடி வழங்கப்படும்.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் https//ahidf.udyamimitra.in என்ற இணைய தளத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை :
கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள். இதற்காக இதுவரை பால் சங்கங்களிடமிருந்து 51.23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 41,40 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு விரைவில் வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!
நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க முனைபவர்களுக்கு அரசு மானியத்துடன் எளியமுறை கடன் வசதி!
ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்ட சிறந்த வழி! முதலீடு செய்ய அழைப்பு!