தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த குக்கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும், சுமார் ஆயிரம் டன் (1000 Ton) சாணம் (Cow dung) விலைக்கு வாங்கப்பட்டு கேரளத் தேயிலைத் தோட்டங்களில் இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேரள விவசாயிகளைக் பொருத்தவரை, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதாலும் மண் வளம் பாதிப்பதோடு விளை பொருட்கள் விஷமாகிறது என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.
இயற்கை உரம் (Natural fertilizer)
எனவே வாடிக்கையாளர்களின் நலன்கருதி, தேயிலை விவசாயிகள் இயற்கை உரத்தை நாடுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவைகளை அங்குள்ள சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.
அவற்றில் ரசாயன பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தியது தெரியவந்தால் திருப்பி அனுப்புகின்றனர். ஏனெனில், கேரள விவசாயிகள் விளை பொருட்களை இயற்கையுடன் இணைந்து சாகுபடி செய்கின்றனர்.
விற்பனையாகும் மாட்டுச்சாணம் (Cow dung for sale)
இதனால் தேயிலை உள்ளிட்ட விளை பொருட்களில் இயற்கையான ருசி, சத்து குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர். இதற்காக தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட பலி மாவட்டங்களில் இருந்து ஆடு மற்றும் மாட்டுச் சாணத்தை மட்கவைத்துத் தயாரிக்கப்படும் இயற்கை உரம், கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு இந்த உரத்தை தேயிலைத் தோட்டங்களுக்கு அடி உரமாக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம் தேயிலையின் நிறம், மணம், சுவை ஆகியவை தரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த இயற்கை உரம் பெற கேரள வியாபாரிகளின் தமிழக வருகை அதிகரித்துள்ளது.
முன்பதிவு (Advance Booking)
குறிப்பாக பல மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் ஆடு, மாடு வளர்ப்போரிடம் முன்பணம் செலுத்தி சாணத்தை மக்க வைத்து டன் கணக்கில் கொள்முதல் செய்கின்றனர். இதனால், தமிழக மாட்டுச்சாணம் கேரளத் தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரமாக மாறுகிறது.
மேலும் படிக்க...
தமிழகத்திற்கு 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக் கட்டித்தருகிறது மத்திய அரசு!
41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!