நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அவசியமான ஒன்று பணம். அதனை வங்கி ATM மூலம் பெறுவதைப் போல, பசும்பாலைக் குடிக்க விரும்புபவர்களும், இயந்திரம் மூலம் பெறும் வசதியை தமிழக பொறியியல் பட்டதாரி ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
எந்தப் பொருளை வாங்கினாலும் ATM கார்டு மூலம் பணத்தை செலுத்தி, டிஜிட்டல் சேவைக்கு ஒத்துழைப்பு அளிப்போருக்கு, பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது மத்திய அரசு.
இளைஞர் கண்டுபிடிப்பு (Youth Innovation)
இதனை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தின் காளப்ப நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பாலமுருகன், ரீசார்ஜ் கார் மூலம் காசு செலுத்தினால், பசும்பால் வழங்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
உதவும் முயற்சி (Try to help)
பால் வியாபாரிகளுக்கும், பசும்பால் நுகர்வோருக்கும் உதவும் வகையில், இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை MIT (Madras Institute of Technology) மாணவரான பாலமுருகன் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிக்க, கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இயந்திரத்தின் சிறப்பு அம்சம் (Special feature of the machine)
-
பால் வழங்கும் இயந்திரத்தின் மூலம் குறைந்த பட்சம் 5ரூபாய்க்கே பசும் பாலைப் பெற முடியும்.
-
அதிலும் காலையும் மாலையும் ஃபிரஷ்ஷாக (Fresh) பால் வாங்கிக் குடிக்க வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு வேளையும் பால் வழங்கப்படும்.
-
இந்த இயந்திரம் முதலில் பணத்தை எடுத்துக்கொண்டு, பிறகுதான் பசும்பாலை விநியோகம் செய்யும்.
-
மாதந்தோறும் தாங்கள் வாங்க விரும்பும் பாலுக்கு ஏற்ப, இந்த இயந்திரத்திலேயே பணத்தை செலுத்தி வாடிக்கையாளர்கள், ATM Card போல ரீசார்ஜ் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.
-
நம் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது போல், காசை ரீசார்ஜ்ஜூம் செய்துகொள்ளலாம்.
இயந்திரம் குறித்து பாலமுருகன் கூறுகையில், இந்த இயந்திரத்தை, கொல்லிமலை சாலையில் உள்ள எங்கள் கடையில் வைத்து பால்விநியோகம் செய்து வருகிறோம். எங்கள் முயற்சிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.
எங்கள் மாட்டுப்பால் மற்றும் நண்பர்களின் பாலை சேகரித்து, இந்த இயந்திரத்தில் உள்ள 40 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரத்தில் பாலை சேர்த்துவிடுவோம். காலையில் 5.30 முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும்.
விலை (Price)
நாள் முழுவதும் பாலை பதப்படுத்தி வைத்துக்கொள்ளும் குளிரூட்டும் (Cooling Model) வசதியுடன் கூடிய பால் வழங்கும் இயந்திரத்தின் விலை ரூ.1.75 லட்சம் ஆகும்.
அதேநேரத்தில் குளிரூட்டும் வசதி இல்லாத இயந்திரத்தின் விலை ரூ.60,000. இந்த இயந்திரங்களை பால் வியாபாரிகளும், வர்த்தகர்களும் ஆர்வமுடன் ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க...
18ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!