1. கால்நடை

கால்நடைகளில் சாணப்பரிசோதனை ஏன் அவசியம்?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Why is manure testing necessary in cattle?

Credit : IndiaMART

ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை அமைத்துத் தருவதில் கால்நடைகளின் பங்கு இன்றியமையாதது. மாடுகள் பாலுக்காகவும், ஆடுகள் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இறைச்சி மற்றும் பால் உற்பத்தியானது அக ஒட்டுண்ணிகள் தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், உருளைப் புழுக்கள் மற்றும் ஓரணுஒட்டுண்களின் (காக்ஸிடியா) தாக்கத்தினால் இறைச்சி மற்றும் பால் உற்பத்தியானது வெகுவாக குறைந்து பொருளாதார இழைப்பை ஏற்படுத்துகிறது.

சாணப் பரிசோதனையின் அவசியம்(The need for manure testing)

ஆடு மாடுகளின் இறைச்சி, பால் மற்றும் ரோம உற்பத்தி குறைவிற்கும் அதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்திற்கும், ஆடு, மாடுகளின் வயிற்றில் காணப்படும் தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், உருளைப்புழுக்கள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணியான காக்ஸிடியா போன்றவை காரணமாக அமைகின்றன.

இறப்புக்கு கழிச்சலே காரணம் (The cause of death is deduction)

குறிப்பாக ஆடு மாடுகளில் ஏற்படும் கழிச்சலுக்கு இந்த ஒட்டுண்ணிகள்தான் காரணமாக இருக்கின்றன. வெள்ளாட்டுக்குட்டிகளில் 70 சதவீத இறப்பிற்கும் கழிச்சலே காரணமாக இருக்கிறது.

எனவே இந்த கழிச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய சாணப்பரிசோதனை மிகவும் அவசியமாகிறது.

 நோய் தாக்குதல்  (Disease attack)

  • நோயினால் பாதிக்கப்படாத ஆடு மாடுகள் கெட்டியான, நாற்றமில்லாத சாணத்தை வெளியேற்றும். நோயுள்ள கால்நடைகள் இளகிய அல்லது தண்ணீர் போன்ற சில நேரங்களில் நாற்றத்துடன் சாணத்தை வெளியேற்றும்.

  • நங்கூர தட்டைப்புழுக்களால் (ஆம்பிஸ்டோம்ஸ்) பாதிக்கப்பட்ட ஆடு மாடுகள் தண்ணீர் போன்ற நாற்றமடிக்கும் சாணத்தை வெளியேற்றும்.

  • நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடு மாடுகள் குறிப்பாக ஆட்டுக்குட்டிகள் மற்றும் கன்றுகளின் சாணத்தில் நாடாப்புழுக்களின் சிறு பகுதிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

  • டாக்ஸோகோரா என்ற மிகப்பெரிய உருளைப்புழுக்களால், பாதிக்கப்பட்ட எருமைக்கன்றுகளின் சாணமானது கெட்டியாகக் களிமண் போலக் காணப்படும்.

சாணப்பரிசோதனை செய்வது எப்படி?(How to do manure testing?)

சாணத்தின் நிறம்

  • ஆடு, மாடுகளின் சாணமானது பச்சை நிறமாக இருக்கும்.

  • ஆடு, மாடுகளின் சாணத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறு புளியங்கொட்டை போன்று காணப்பட்டால், அவை நங்கூர தட்டைப்புழுக்களின் இளம் பருவ புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும்.

  • ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தில் அரிசி போன்ற வெண்மை நிறத்தில் சிறு பருக்கள் காணப்பட்டால் அவை நாடாப்புழுக்களின் சிறு துண்டுகளாக இருக்கும்.

  • கன்றுகளின் சாணம் சிவப்பு நிறத்தில் இருந்தால் காக்ஸிடியா நோயின் தாக்கமாக இருக்கும்.

  • குடற்புழுக்களின் முட்டைகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளின் கூட்டுப்பருவங்களைக் கண்டறிந்து தேவையான சாண மாதிரிகளைக் கீழ்கண்டவாறு எடுத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.

1.கைகளில் கையுறைகளைப் பயன்படுத்தி ஆடு, மாடுகளின் ஆசனவாயில் இருந்து சாணத்தை எடுத்து அனுப்பலாம்.


2.ஆடு, மாடுகள் சாணத்தை வெளியேற்றும் போதும் அவற்றை எடுத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.

அனுப்பும் முறைகள்(Sending methods)

சாண மாதிரிகளை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது வாய் ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக் பைகளில் வைத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

தகவல்

முனைவர் சி.சௌந்தரராஜன்

பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி மையம்

ஏனாத்தூர்.

9500563853

மேலும் படிக்க...

பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!

ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!

கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வரத் தடை!

English Summary: Why is manure testing necessary in cattle?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.