ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை கால்நடைகளில் இடம்பெறும். இவற்றை வளர்ப்பதில், பெரும் சவாலாக இருப்பது நோய் மேலாண்மைதான் (Disease Management). அதிக செலவு பிடிப்பதும் அதுவே.
நோய் மேலாண்மை (Disease Management)
ஆக, நோய் தீர்ப்பதற்கான இயற்கை மருத்துவத்தையும் (Natural Medicine) தெரிந்துவைத்துக்கொண்டு, பயன்படுத்தினால், செலவைக் குறைத்துக்கொண்டு விவசாயிகள் நன்கு பயனடைய முடியும்.
எனவே கோழிகளைத் தாக்கும் முக்கிய நோய்களையும், அவற்றைத் தீர்க்கும் இயற்கை மருந்துகளையும் பார்ப்போம்.
சளி(Cold)
-
கோழிகளுக்கு சளி பிடித்து முற்றி விட்டால் அவற்றால் கண்களை திறக்க முடியாது.
-
அக்கோழியை தனியாகப் அடைத்து வைத்து, பசு மஞ்சளுடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தரவும்.
-
காலை முதல் மாலை வரை, 4 முறை கொடுக்கவும்.
-
மாலை 6 மணிக்கு மேல், பசு மஞ்சள் 2, சின்ன வெங்காயம் 4, செம்முள்ளி (அல்லது) ஈஸ்வர மூலி இலை 6, சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி கோழிகளுக்கு தரவும்.
-
தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை.
-
அடுத்த நாள் காலையில் சளித் தொல்லை நீங்களை கோழிகள் கண்களை திறந்துகொள்ளும்.
வெள்ளைக் கழிச்சல், இரத்தக்கழிச்சல் நோய் (White diarrhea, hemorrhagic disease)
-
இரையை சாப்பிடும் பட்சத்தில், பன்றி நெய்யுடன் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து தரலாம். அல்லது சாறு எடுத்துக் கொடுக்கலாம்.
-
மாலையில் பசு மஞ்சள் 2, சின்ன வெங்காயம் 4, செம்முள்ளி(அ) ஈஸ்வர மூலி இலை 6, நிலவேம்பு 6 ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி கோழிகளுக்குக் கொடுக்கவும்.
-
தண்ணீர் கொடுக்க வேண்டாம்.
-
தொடந்து ஒரு 4 நாட்களுக்கு தந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அம்மை நோய் (chicken pox)
-
பன்றி நெய்யுடன் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து தரவும். அல்லது சாறு எடுத்துப் பருகக் கொடுக்கலாம்.
-
அதேபோல் பன்றி நெய்யுடன் சிறிது பசு மஞ்சள் சேர்த்து அம்மையின் மேல் பூசி விடவும்.
-
மாலையில் பசு மஞ்சள் 2, சின்ன வெங்காயம் 4, செம்முள்ளி இலை 4, சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி கோழிகளுக்குக் கொடுக்கவும்.
-
தண்ணீர் கொடுக்கக்கூடாது. தொடந்து ஐந்து நாட்களுக்கு கொடுத்து வர அம்மை நோய் குணமடையும்.
கொட்டகைப் பராமரிப்பு (Shed maintenance)
-
வாரத்தில் ஒரு 3 நாட்கள் EM கரைசல் (அ) WDC கரைசல் கொண்டு கோழி கூண்டிற்கு Spray செய்து விட வேண்டும்.
-
வாரத்தில் 2 நாள் சாம்பிராணி புகை போடவேண்டியது கட்டாயம். இதன் மூலம் நோய்த் தாக்குதலை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.
கோழிகளுக்கு இந்த மருத்துவத்தைக் கடைப்பிடிப்பதால், நோய்கள் 100 % குணமடைவது உறுதி.
தகவல்
நெல்லை சாரதி
கால்நடை விவசாயி
மேலும் படிக்க...
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!