1. கால்நடை

பன்றி வளர்ப்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்

T. Vigneshwaran
T. Vigneshwaran

பன்றி வளர்ப்பு மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இதை ஒரு தொழிலாக யாரெல்லாம் தொடங்கலாம்.

பன்றி வளர்ப்புத் தொழில் யாருக்கு ஏற்றது?

  1. நிலமற்ற மற்றும் சிறிய அளவில் பயிரிடும் விவசாயிகளுக்கு இலாபகரமாக இருக்கும்.

    2.விவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களும் இதை தொடங்கலாம்.

  1. பள்ளிக்கே செல்லாத மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏற்றது.

  2. பெண்கள் இந்த தொழிலை செய்தால் மிகவும் நல்லது.

பன்றியின் இனங்கள்

நம் நாட்டில் நாட்டுப் பன்றிகளே பல ஆண்டுகாலமாக  வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவாக காணப்பட்டது. எனவே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு பன்றி இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் வளர்க்கப்படும் வெளிநாட்டுப்  பன்றி இனங்கள்,

  1. வைட் யார்க்ஷயர்

இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் அயலநாட்டுப் பன்றியினம் வைட் யார்க்ஷயர் இனம். இந்த இனம் வெள்ளை நிறம் அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். விரைத்த காது , தட்டு போன்ற முகம் மற்றும் நீளமான மூக்கைக் கொண்டிருக்கும்.

நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்கு சரியான இனம். அதிக குட்டிகளை ஈனும் திறன் கொண்டது.

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை சுமார்  300-400 கிலோ வரை இருக்கும். வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை 230-320 கிலோ வரை இருக்கும்.

2. லேண்ட்ரேஸ்

வெள்ளையான உடலில் கருப்பு நிறப்புள்ளிகளில் தோன்றும் பன்றி இனம் தான் லேண்ட்ரெஸ் இனம். நீண்ட உடல் மற்றும் தொங்கிய காதுகள் இந்த இனத்தை தனித்துவமாக காட்டுகிறது. அதிக குட்டிகள் ஈனும் திறனும் கொண்டுள்ளது. இந்த பன்றியின் இறைச்சி  வைட் யார்க்ஷயர் இனத்தின் இறைச்சி போன்றே இருக்கும். நாட்டுப்பன்றிகளுடன் கலப்பினம் செய்வதற்கு இதுவும் ஏற்ற இனம் தான்.

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை சுமார் 270-360 கிலோவாகவும்,வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை சுமார் 200-320 கிலோவாகவும் இருக்கும்.

மிடில் வொய்ட் யார்க்ஷயர்

இந்தியாவின் சில பகுதிகளில் நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது. மிக வேகமாக வளரும் திறன் கொண்டது. இதன் குட்டி ஈனும் திறன் வைட் யார்க்ஷயர் பன்றியை விட குறைவு.

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை சுமார்  250-340 கிலோவாகவும், வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை சுமார் 180-270 கிலோ வரை இருக்கும்.

பன்றி வளர்ப்பின் நன்மைகள்

1.பன்றிகள் வேகமாக வளரும் தன்மையைக் கொண்டது. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டு குட்டிகளை ஈனக்கூடிய திறன் கொண்டது.

  1. பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சி கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரதச்சத்து மிக்க இறைச்சியாக மாற்றுகின்றன.

3.பன்றிகளை இறைச்சிக்காக கூறுபடும்போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும்.

  1. பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது.

மேலும் படிக்க:

பன்றிகள் தொல்லை...! சேலையில் வேலி கட்டி வயலை பாதுகாக்கும் விவசாயிகள்!

கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் வழங்கும் இலவச பயிற்சி

 

English Summary: The benefits of pig farming and who can start it as a business. Published on: 16 June 2021, 04:12 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.