1. Blogs

அரசு மானியத்துடன் சூரிய சக்தி கூடார உலர்த்தி அமைக்க அழைப்பு

KJ Staff
KJ Staff
Tamilnadu Farmers

தேனி மாவட்ட விவசாயிகள் அரசு மானியத்துடன் சூரிய சக்தி கூடார உலர்த்தி அமைத்து பயன்பெறுமாறு  வேளாண்துறை சார்பாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்  செயற்பொறியாளா் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனை, அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை உலர்த்துவதற்கும்,  மதிப்புக் கூட்டுப் பொருளாக விற்பனை செய்வதற்கும்,  இந்த 'சூரிய சக்தி கூடார உலர்த்தி' பயன்படுகிறது.

சூரிய சக்தி கூடார உலர்த்தி

இக்கூடாரம் பசுமை குடில் போன்று தோற்றமளிப்பதாகவும், இரட்டை அடுக்கு பாலிகார்பனேட் தகடுகள் மூலம் கூரை அமைக்கப்படும். கான்கிரீட் மற்றும் கடப்பா கல் கொண்டுதரைத்தளம் அமைக்கப்படும். சூரிய ஒளியில் இருந்து சக்தியை உருவாக்க சிறிய சோலார் பேனல் கூடாரத்தின் மேலே பொருத்தப்படும். இதில், 3 அல்லது 4 காற்றை வெளியேற்றும் பேன்கள் பொருத்தப்படும். விளை பொருட்களை உலர வைக்க இக்கூடாரத்திற்குள் டிராலி தட்டுகள் வழங்கப்படும். டிராலி தட்டுகளில் விவசாய பொருட்களை காய வைப்பதன் மூலம் உட்புகும் சூரிய வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்பதால்,உள்ளே சுமார்  65 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தக்க வைக்கும். இத்துடன் வெப்பத்தின் அளவை சீர் செய்ய  வெப்ப கட்டுப்பாடு இணைக்கப்பட்டிருக்கும்.

Solar Dryer Tent

விவசாயிகளின் தேவை மற்றும் இட வசதிக்கு ஏற்ப 400 முதல் 1,000 சதுர அடி வரை சூரிய சக்தி கூடார உலா்த்திகள் அமைத்துத் தரப்படும். சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு சூரிய சக்தி கூடார உலர்த்தியின் மொத்த மதிப்பில் 60 சதவீதம் அல்லது ரூ.3.50 லட்சம், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும்.

ஆா்வமுள்ள விவசாயிகள் தேனி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரிலும், தொலைபேசி எண்கள்: 04546- 253439, 251555, 04554-265132 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: An announcement of Theni districts farmers, Department of Agricultural Engineering instal solar dryers with subsidy Published on: 23 October 2019, 03:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.