1. Blogs

Gokulashtami 2022: கோகுலாஷ்டமி அன்று எவ்வாறு வழிபட வேண்டும்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Gokulashtami 2022: How to worship on Gokulashtami!

கிருஷ்ணர் பிறந்த இந்நாளை கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி (ஆவணி 3) அதாவது நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. வட இந்தியாவில் ராச லீலா என்றும் தஹி அண்டி (தயிர்க் கலசம் உடைப்பது) போன்ற விளையாட்டுகள் மூலம் கோலகலமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. எனவே, நாம் இந்த பதிவில் கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதை பார்க்கலாம்.

செய்யக்கூடியவை:

  1. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து  பூஜிக்க வேண்டும். 
  2. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டில் கிருஷ்ணர் பிறப்பதாக ஐதீகமும் உண்டு.
  3. இதற்கு, அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானை சென்றடையும் வரை அவருடைய திருபாதங்களை வரைந்திட வேண்டும்.
  4. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாக இருந்து வருகிறது.
  5. அன்றைய நாளில் பூஜை செய்து பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை உச்சரித்தல் நன்மை பயக்கும்.
  1. மேலும், உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கண்ணன், ராதைபோல அலங்கரித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டு முறை குழந்தைகளின் கல்வி, உடல்நலனுக்கு நல்லது என்பது குறிப்பிடதக்கது.

செய்யக்கூடாதவை:

  1. இந்த நாளில் மாலை வரை குளிக்காமல் இருப்பது,  வீட்டில் தரித்திரம் உண்டாக வழிவகுக்கிறது. 
  2. கசப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடல் வேண்டும். எனவே, கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு உணவுகளை செய்து உண்ணலாம். 
  3. இந்த நாளில்  பெரியோர்களிடம் சண்டை, சச்சரவுகளை தவிர்த்திடல் நல்லது. 

  1. இந்த நாளில் இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்த்திட வேண்டும். வேண்டும் என்றால், கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை எளிய சிறுவர் சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்வி உதவிகளை செய்தால் நம் வாழ்வில் வேண்டிய வரத்தை கிருஷ்ணர் தருகிறார் என்ற ஐதீகமும் உண்டு.
  2. இவ்வாறு செய்தால் வேண்டிய புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாக திறமை, அறிவாற்றல் அனைத்திலும் சிறந்து விளங்க முடியும் என நம் முன்னோர்களால் கூறப்படும் ஐதீகமாகும்.

மேலும் படிக்க:

2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண்மை பயிர்கள் குறித்த 4வது முன் மதிப்பீடு

இந்த ஊர்ல தான் பால் விலை குறைவு: தெரிந்து கொள்ளுங்கள்!

English Summary: Gokulashtami 2022: How to worship on Gokulashtami! Published on: 18 August 2022, 02:05 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.