1. Blogs

அதிக வட்டி தரும் டிஜிட்டல் FD திட்டம்: இதோ சிறப்பு அம்சங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Digital Fixed Deposit

தனியார் வங்கியான ஆர்பிஎல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக டிஜிட்டல் வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, வங்கி கிளைக்கு செல்லாமலேயே சில நொடிகளில் டிஜிட்டல் முறையில் ஆர்பிஎல் வங்கியில் வைப்பு நிதி கணக்கை தொடங்கி முதலீடு செய்ய முடியும்.

டிஜிட்டல் FD

டிஜிட்டல் FD திட்டத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, வெறும் வைப்பு நிதி மட்டுமல்லாமல் பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ், சேமிப்பு கணக்கு உடனடியாக தொடங்கும் வசதி, FD டிஜிட்டல் முறையில் கண்காணிப்பது போன்ற வசதிகளும் இருக்கின்றன. டிஜிட்டல் FD கணக்குதாரர்களுக்கு மருத்துவமனை தினசரி பணப் பலன் பாலிசி (Hospital Daily Cash Benefit Policy) கீழ் மருத்துவமனை செலவுகளுக்காக பணப் பலன் வழங்கப்படுகிறது. பயனாளிகள் தங்கள் மொபைலில் ஆர்பிஎல் வங்கியின் RBL Bank MoBank ஆப் டவுன்லோடு செய்து FD ரசீதுகளை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

உடனடி ஆன்லைன் KYC வாயிலாக சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் FD கணக்கை தொடங்க முடிகிறது.

கணக்கு தொடங்க மூன்று படிகள்

  1. ஆதார், பான் விவரங்களை வழங்குவது.
  2. வீடியோ வாயிலாக KYC முடிப்பது.
  3. ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக FD முதலீடு செய்வது.

வட்டி (Interest)

ஆர்பிஎல் வங்கி டிஜிட்டல் FD திட்டத்தில் 15 மாதம் முதல் 725 நாட்களுக்கு 7.8% வட்டி விகிதம் வழங்குகிறது.

மேலும் படிக்க

வங்கி கடன் வாங்கியோருக்கு நற்செய்தி: ரிசர்வ் வங்கி அறிக்கை!

இனி தாலிக்கு தங்கம் கிடையாது: தமிழ்நாடு அரசின் மாற்று ஏற்பாடு இதுதான்!

English Summary: High interest digital FD plan: Here are the special features! Published on: 19 April 2023, 08:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.