1. Blogs

விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸாகும் Jio Air Fiber-ல் இவ்வளவு வசதியா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
How is Jio AirFiber different from Jio Fiber

திங்களன்று நடைபெற்ற சமீபத்திய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM- Annual General Meeting) ஜியோ ஏர்ஃபைபர் குறித்த அறிவிப்பானது டெக் உலகில் பேசுப்பொருளாகி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு நடைப்பெற்ற வருடாந்திர கூட்டத்தில் ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகப்படுத்தியது. இப்போது அதனை பரவலாக கிடைக்கும் வகையில் தீவிரப்படுத்தியுள்ளது. புதிய AirFiber சேவையானது செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியிலிருந்து கிடைக்கும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

Jio AirFiber ஆனது Jio Fiber போன்ற ஃபைபர்-ஆப்டிக் இணைப்புகளைப் போலவே அதிவேக இணைப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த புதிய Air Fiber ஆனது, வயரிங் தேவையில்லாமல் தனிப்பட்ட Wi-Fi நெட்வொர்க்குகளை நிறுவுவதற்கு True 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். பயனர் நட்பு அமைப்பாக விளங்கும் இவை (user-friendly)  எளிமையான பிளக்-அண்ட்-ப்ளே (plug-and-play) செயல்பாட்டை உள்ளடக்கியது, பயனர்கள் தங்கள் வைஃபை ஹாட்ஸ்பாட்களை சிரமமின்றி தேவைப்படுகிற இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

(Jio AirFiber) VS (Jio Fiber):

ஜியோ ஃபைபர் சேவையானது அடிப்படையான ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தை கொண்டது. பயனர்கள் தங்கள் வீடுகளுக்கு நேராக ஃபைபர் ஆப்டிக் வயர்கள் மூலம் இணைய சேவையினை பெறுவார்கள். இந்த ஆப்டிக் வயர்கள் ஒரு ரூட்டருடன் அல்லது நேரடியாக இணைய இணைப்பு தேவைப்படும் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Jio Fiber நிலையான அதிவேக இணைய சேவையினை வழங்கும். ஆனால் இணைப்பை வழங்குவதற்கு அதிக அடர்த்தியான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் இதற்கு அப்படியே மாற்று. இதில் வயர் எதுவும் தேவைப்படாது. பயனர் இதை வாங்கி வைத்தால் போதும். இது அதிவேக இணைய சேவையினை வழங்கும் வைஃபை ஹாட்ஸ்பாட் போல வேலை செய்கிறது.

இந்தத் தொழில்நுட்பமானது ஒரு நாளைக்கு 1,50,000 இணைப்புகளை நிறுவும் திறனைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமான நெட்வொர்க்கை விரிவுபடுத்துவது மற்றும் 200 மில்லியன் நபர்களுக்கும் அதிகமாக இணைய சேவை வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற இத்திட்டம் உதவும் என நம்பப்படுகிறது. வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் Jio AirFiber சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜியோ ஏர்ஃபைபரின் அறிமுகமானது தற்போதுள்ள 10 மில்லியன் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களின் பயனர் தளத்தைப் பின்பற்றுகிறது. நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் 1.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபருடன் ஒருங்கிணைந்த ஜியோ ஸ்மார்ட்ஹோம், ஜியோ ஸ்மார்ட்ஹோம் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ செட்-டாப் பாக்ஸ், தொலைக்காட்சி சேனல்கள் முதல் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கம் மற்றும் கேமிங் வரை பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்களுக்கான நுழைவாயிலாகச் செயல்பட்டு வருகிறது. ஜியோ ஸ்மார்ட்ஹோம் ஆப் இதனை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது என குறிப்பிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

மேலும் காண்க:

ஓணம் பண்டிகை: மலையாளத்தில் பேசி வாழ்த்திய முதல்வர்

குவிண்டாலுக்கு ரூ. 10,000 வரை லாபம் தரும் குல்கைரா சாகுபடி

English Summary: How is Jio AirFiber different from Jio Fiber Published on: 29 August 2023, 11:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.