1. Blogs

சரக்கு அடித்தால் போதை ஏறுவதில்லை - உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Letter of complaint to the Minister of Home Affairs!

மது போதையில் ஆசாமிகள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. அன்றாடம் அவர்களின் அலப்பறைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உண்டு. இதனால்தான் ஒரு கட்டத்தில், அடித்துப் பட்டையைக் கிளம்பும் நிலைக்கு குடும்ப உறுப்பினர்கள் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு குடிமகன் ஒருவன், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது வேடிக்கையின் உச்சமாகவே மாறியிருக்கிறது.

மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி அருந்தினால் போதை ஏற மறுக்கிறது. இதனால் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி குடித்ததாகவும், ஆனால் மதுவில் போதை ஏறவில்லை என்றும், இதனால் அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்தப் புகார் கடிதத்தை அவர் உள்ளூர் கலால் துறை அதிகாரிகளுக்கும், மாநில மந்திரிக்கும் அனுப்பியிருந்தார்.

இதேபோல தனது செருப்பு காணாமல் போனதற்கு, வித்தியாசமான புகார் ஒன்றையும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி கொடுத்துள்ளார்.
தரோட் கிராமத்தை சேர்ந்த ஜித்தேந்திரா பக்ரி என்பவர் காவல் துறையினருக்கு ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய 180 ரூபாய் மதிப்புள்ள கருப்பு செருப்பு ஒன்று காணாமல் போய்விட்டது என்றுக் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை அந்த செருப்பு கொலை, கொள்ளை குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டால் அந்த சம்பவத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்கூட்டியே தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
குடிமகன்களின் இந்த வேடிக்கைகள் அதிகாரிகளுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க...

இனிப்புக்காக உலர் திராட்சை -ஆரோக்கியத்திற்கு அத்தனை கேடு!

ரசாயனத்தால் பழுக்கவைத்த 7 டன் மாம்பழம் பறிமுதல்- வாடிக்கையாளர்களே உஷார்!

English Summary: Letter of complaint to the Minister of Home Affairs! Published on: 10 May 2022, 12:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.