1. Blogs

சாகுபடியாளா்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு: புதுச்சேரி வேளாண் துறை தகவல்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Subsidy for pulses

நிகழாண்டிற்கான மணிலா மற்றும் பயறு வகை விதைகளுக்கான மானியத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க இருப்பதாக  புதுச்சேரி வேளாண் துறையின் பயிற்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், அட்டவணை இனத்தவருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகள் தங்களின் வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி ஆலோசனை பெறலாம்.  மேலும் தாங்கள் உத்தேசித்துள்ள சாகுபடி பரப்பளவு மற்றும் அதற்கேற்ற விதைகளை பெறவுள்ள உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மானியத் தொகையை வேண்டி விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான படிவத்தை அருகில் இருக்கும் உழவா் உதவியகத்தில் பெற்று பூர்த்தி செய்து அத்துடன் விதைகளை வாங்கியதற்கான ரசீதை இணைத்து வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

English Summary: Pondicherry Government plans to give subsidy for pulses farmers Published on: 24 December 2019, 02:46 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.