1. Blogs

வயதானோருக்குத் தனிமையைப் போக்கும் ரோபோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Robot that takes away loneliness for the elderly!
Credit : The Economic Times

எந்த வயதிலும், உற்றதைப் பரிமாறத் தோழமைத் தேவைப்படுகிறது. இளைமைக்காலங்களைத் தவிர்த்தால், முதுமையில் தனிமை மிகக் கொடுமை.

முதுமைக் கொடுமை (The cruelty of old age)

இத்தகையக் கொடுமையில் இருந்து வயதானவர்களைப் பாதுகாக்கவும், அவர்களது உடல் நலனைக் கண்காணிக்கவும் உதவும் ரோபோ நண்பனை ஐதராபாத் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த 'அசாலா ஐ.டி., சொல்யூஷன்ஸ்' என்ற கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம், வயதானோருக்கான இந்தப் புதிய ரோபோவை அறிமுகம் செய்ய உள்ளது.

உதவும் ரோபோ (Robot to help)

இது குறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ராஜு கூறியதாவது:

மாறிவரும் குடும்ப கட்டமைப்புகளால், வயதானோர் தனியாக வசிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானோருக்கு வயோதிகம் தொடர்பான உடல் பிரச்னைகள் இருக்கும்.

எல்ரோ

இதைத் தவிர பேசுவதற்கு கூட யாரும் இல்லாததால் மன அழுத்தம் உள்ளிட்ட பிற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே வயதானோரின் தனிமையை விரட்டும் வகையில் 'எல்ரோ' என்ற பெயரில் சிறிய வகை ரோபோவை வடிவமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரோபோவின் சிறப்பு அம்சங்கள் (Special features of the robot)

  • இது, வயதானவர்களுக்கு உற்றத் தோழனாக, மகனாக, மகளாக ஏற்ற உறவாக இருக்கும்.

  • அது மட்டுமல்ல, வயதானோரின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நர்ஸாகவும் செயல்படும்.

  • தேவைப்படும்போது மருத்துவர்களுடன் பேசி ஆலோசனைகளையும் பெற்றுத் தரும்.

  • தேவைப்படும் மருந்துகளையும் ரோபோ நண்பன் வாயிலாக 'ஆர்டர்' செய்யலாம்.

  • உடல்நிலையில் அதிக பாதிப்பு இருந்தால், குறிப்பிட்டோருக்கு தகவல் தெரிவிக்கும் வசதியும் இந்த ரோபோவில் உள்ளது.

  • வயதானோரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு விருப்பமான பொருட்கள் குறித்தும் இந்த ரோபோ விவாதிக்கும். அதனால், பேச்சுத் துணைக்கு ஆளில்லையே என்ற கவலை இல்லை.

  • தற்போதைக்கு ஆங்கிலத்தில் தான் இந்த ரோபோவுடன் உரையாட முடியும்.

  • மிக விரைவில் அனைத்து மொழிகளிலும் பேசும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

விலை (Price)

இந்த ரோபோவின் விலை 25 ஆயிரம் ரூபாய். மருத்துவர்களுடன் பேசுவது, மருந்துகள் வாங்கித் தருவது போன்ற சேவைகளுக்காக, மாதம் 1,500 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். உண்மையிலேயே இந்த ரோபோ, தனிமையில் வாடும் முதியவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!

English Summary: Robot that takes away loneliness for the elderly! Published on: 23 September 2021, 12:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.