1. Blogs

வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Thoothukudi District Recruitment

கூட்டுறவு விற்பனை சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் காலிப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு,தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் முழு விவரம் பின்வருமாறு -

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால், 10-11-2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள் எப்போது?

இத்தேர்வுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களை www.drbtut.in என்ற இணையதளம் வழியாக (Through Online Only) மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித்தேதி 1-12-2023 அன்று பிற்பகல் 5:45 மணிவரை. இதற்கான எழுத்துத்தேர்வு 24-12-2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி: இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 ஆம் ஆண்டு நேரடி பயிற்சி / அஞ்சல்வழி / பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு (Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை, தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துதேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் மற்றும் அரசாணைப்படியான இடஒதுக்கீடு, இனச்சுழற்சி முறை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்படுவார்கள். மேலும், இதுதொடர்பான விரிவான விவரங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் www.drbtut.in  வெளியிடப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

இதையும் காண்க:

செம்மறி ஆடுகளை இலவசமாக தரும் நெருக்கடியில் விவசாயிகள்- காரணம் என்ன?

தக்காளியுடன் ஊடுபயிர் போட எந்த செடி நல்ல சாய்ஸ்?

English Summary: Thoothukudi District Recruitment to fill vacancies of Agricultural Co operative Credit Societies Published on: 26 November 2023, 12:07 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.