1. Blogs

ஆதார் அப்டேட் தொடர்பா WhatsApp மெசேஜ் வருதா? உஷாரா இருங்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
UIDAI warning against Aadhaar updation over WhatsApp

UIDAI, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதன்படி, ஆதார் விவரங்களை அப்டேட் செய்யுமாறு உங்களுக்கு வாட்ஸ் அப் அல்லது மெயில் மூலம் மெசேஜ் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

UIDAI-இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையானது, ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான செயல்முறைகளுக்காகவும் பயன்படுகிறது. தனிநபர் தொடர்பான அனைத்து தகவல்களும் ஆதார் எண்ணில் இருப்பதால் அதனை திருட பல மோசடி வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தான் "BewareOf Fraudsters. UIDAI உங்கள் POI/ POA ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது Whatsapp மூலம் புதுப்பிக்க உங்கள் POI/ POA ஆவணங்களைப் பகிர ஒருபோதும் கேட்பதில்லை என ஒரு ட்விட் ஒன்றினை UIDAI பதிவிட்டுள்ளது.

மேலும், UIDAI உங்கள் ஆதார் OTP அல்லது mAadhaar பின்னை ஒருபோதும் கேட்காது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றிய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சமீபத்தில் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அதே சமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (POI-Proof of Identity) மற்றும் முகவரி சான்று POA- (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தினை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றது.

1) வாக்காளர் அடையாள அட்டை 2) குடும்ப அட்டை, 3) ஓட்டுநர் உரிமம், 4) பான் கார்டு, 5) வங்கி கணக்கு புத்தகம்.

இந்நிலையில் தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை மெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி சிலர் தகவல்களை திருட முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி வரும் மெசேஜை நம்பி யாரும் ஆவணங்களை அனுப்ப வேண்டாம் என வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியைப் புதுப்பிக்க கீழ்க்காணும் இந்த 8 படிகளைப் (steps) பின்பற்றவும்:

படி 1: uidai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். அதில் விருப்பமான மொழியினை தேர்வு செய்யவும்.

படி 2:  அதன்பின் 'எனது ஆதார்' பக்கத்தின் கீழ், 'புள்ளிவிவரங்கள் தரவைப் புதுப்பித்து நிலையைச் சரிபார்க்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: நீங்கள் வேறு இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்-

https://myaadhaar.uidai.gov.in/. நீங்கள் 'உள்நுழை' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். 'ஓடிபி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்

படி 5: OTP உள்ளீட்டு உள்நுழைந்ததும், 'ஆன்லைனில் ஆதார் புதுப்பி' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 6:  வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்து, 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 7: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தரவினை ( பெயர், பிறந்த தேதி, விலாசம்/முகவரி) தேர்ந்தெடுக்கவும்.  உதாரணத்திற்கு ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய முகவரிக்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 8: விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். முகவரியைப் புதுப்பிக்க ரூ.50 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு

தங்கத்தின் விலை இரண்டு நாளில் கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் அப்சட்

English Summary: UIDAI warning against Aadhaar updation over WhatsApp Published on: 22 August 2023, 03:12 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.