
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வரும் 18-22 தேதி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வேளாண்பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில், உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜனவரி 18 முதல் 22, 2021 வரை வழங்கப்படுதிறது.
பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 + ரூ1800 GST(18%) = ரூபாய் 11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளது. மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் [email protected], [email protected] மற்றும் தொலைபேசி எண்: 0422 – 6611310 கைப்பேசி எண்: 9500476626 தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை கேட்டு பெறலாம்
Share your comments