1. விவசாய தகவல்கள்

இல்லம் தேடி வரும் ரூ.1 லட்சம் வரை வழங்கும் விவசாய கடன் அட்டை: என்ன செய்ய வேண்டும்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Agricultural Loan Card Up To Rs 1 Lakh at home: What To Do

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு விவசாய பெருமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை, இப்பதிவு விளக்குகிறது.

பாரத பிரதமரின் Ghar Ghar KCC Abhiyan – திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் அக்டோபர் 01,2023 முதல் டிசம்பர் 31,2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இம்முகாம்கள் வேளாண்மைத்துறை, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் மூலம் நடத்தப்படவுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டையினை கொண்டு ரூ. 1,60,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) வரை வட்டியில்லா கடன் பெறலாம். இக்கடன் தொகை பெறுவதற்கு எந்தவித அடமானமும் (Collaterals Security) வைக்க தேவையில்லை. எனவே இதுநாள் வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் மற்றும் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணங்கள் (சிட்டா, அடங்கல்), வங்கி கணக்கு புத்தக நகல்
மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 எண்கள் ஆகியவற்றுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாய கடன் அட்டையினை (Kisan Credit Card) பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.ச.உமா, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிசான் கடன் அட்டை நன்மைகள்:

  • பிணையம் ஏதுமின்றி ரூபாய் 1.60 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.
  • ரூபாய் 3 லட்சம் வரை பயிர்களுக்கும், ரூபாய் 2 லட்சம் வரை கால்நடை பராமரிப்பிற்கும் கடன் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்:

  • 7 சதவீத வட்டியில் கிடைக்கும்.
  • ஒரு வருடத்திற்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத சலுகையுடன் 4 சதவீத வட்டியில் கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள்:

  • சிட்டா
  • ஆதார் அட்டை நகல்
  • வங்கி கணக்கு நகல்
  • புகைப்படம்

எனவே, இந்த கிசான் கடன் அட்டை மூலம் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்க இன்ஸ்டென்டாக கடன் பெற, இந்த அட்டை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் படிக்க:

PMFBY: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

ட்ரோன் வாங்க 4லட்சம் மானியம்: வேளாண் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு!

English Summary: Agricultural Loan Card Up To Rs 1 Lakh at home: What To Do Published on: 02 October 2023, 06:01 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.