1. விவசாய தகவல்கள்

உழவுக்கு வந்தனம் செய்வோம் - "தேசிய விவசாயிகள் தினம்"!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் விவசாயிகளின் உழைப்புக்கும், வியர்வைக்கும் வந்தனம் செய்வோம்!

பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் விவசாயிகளின் உழைப்புக்கும், வியர்வைக்கும் வந்தனம் செய்வோம்!

சௌத்ரி சரண்சிங் வரலாறு

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த செளத்ரி சரண் சிங், தான் ஆட்சியில் இருந்த 7மாத காலத்தில் ஜமீன்தாரி ஒழிப்பு முறை சட்டத்தை கொண்டுவந்தார். மேலும், விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்த சௌத்ரி சரண்சிங்கின் பிறந்தாள் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விவசாயம்

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயமாகும். மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சனைகளை பெருமளவில் குறைய வித்திட்டவர் சௌத்ரி சரண் சிங். அவர் காலகட்டத்தில் விவசாயப் பிரச்சனைகள் ஓரளவிற்கு குறைந்திருந்தாலும், இப்போது நிலைமை அப்படி இல்லை. மேலும் மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

 

விவசாயத்திற்கு மாற்று உண்டா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அதை உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் நாம் நிலவிலும் எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பு அளித்து எந்நாளும் வந்தனம் செய்வோம் என உறுதியேற்போம்

English Summary: All you Know Why National Farmers' Day Is Observed In India Published on: 22 December 2020, 05:13 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.