1. விவசாய தகவல்கள்

நகைக்கடன் தள்ளுபடி பெற இன்னொரு சான்ஸ்- அமைச்சர் தகவல் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Another Chance to Get a Jewelry Gun Discount- Minister Info!
Credit : Dailythanthi

குடும்ப அட்டை மற்றும் ஆதார் குறித்த சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடி (Jewelry loan discount)

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

தகவல் சேகரிப்பு (Information gathering)

இதன் அடிப்படையில் தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவைத், தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன.

தள்ளுபடி இல்லை 

அதில் 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர், நகைக் கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தகவல் வெளியானது.

இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருப்பதாவது:-

  • குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

  • தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

  • நகைக்கடன் தள்ளுபடியில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

  • தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

  • மொத்தம் 10.18 லட்ச நகைக்கடன்களே(50 சதவீதம்) தள்ளுபடிக்கு தகுதியானவை. மேலும், 48.84 லட்ச நகைக்கடன்களில், 7.65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை ஆகும்.

  • 21.63 லட்ச நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களால் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது.

  • மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன.இதன் மூலம், 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன.

  • 22 லட்சத்து 52 ஆயிரத்து 226 கடன்தாரர்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேரின் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது!

அனைவருக்கும் மிகவும் அவசியமானது ஆயுள் காப்பீடு பாலிசி!

English Summary: Another Chance to Get a Jewelry Gun Discount- Minister Info! Published on: 30 December 2021, 10:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.