கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக! NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு! கிணறு தோண்ட அரசிடமிருந்து கடனுதவியா? கரும்பு விவசாயி விளக்கம் Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 May, 2024 4:03 PM IST
Automatic Drip Irrigation system

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ள நிலையில், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி மகசூல் பார்க்க வேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு காண சொட்டு நீர்பாசனம் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

அதிலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தானியங்கி முறையில் (Automatic) இயங்கும் சொட்டுநீர் பாசன அமைப்பினை நிறுவ விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பு இயங்கும் விதம், அதன் செயல்திறன் குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தானியங்கி சொட்டுநீர் பாசனம்:

குறைவான நீரினை, தேவையான அளவிற்கு மட்டும் சரியான நேரத்தில் பயிர்களுக்கு பாய்ச்ச தானியங்கி சொட்டுநீர் பாசன அமைப்பு பயன்படுகிறது. நேரக் காப்பகம் (Timer), உணரிகள்(sensors) , கணினி போன்ற தொழில்நுட்ப அமைப்புகளுடன் மிகக் குறைந்த மனித ஆற்றலுடன் நீர்ப்பாசனம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

எப்படி செயல்படுகிறது?

மண்ணில் உள்ள ஈரப்பதத்தை, மண் ஈரப்பத உணரிகள்(MOISTURE METER) மூலமாக நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்படுகிறது. இந்த தரவுகள் மைக்ரோ கண்ட்ரோலர் (micro controller) மூலம் அலகுக்கு (UNIT) செலுத்தப்பட்டு, அதில் கணினி இயங்குவிதமாக மாற்றப்படுகிறது. இத்தரவுகள் புளுடூத் அல்லது வைபை (WiFi) போன்ற தொழில்நுட்ப கம்பில்லாத கடத்தியின் உதவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுகிறது.

நீர்ப்பாசனம் எவ்வாறு பாய்ச்சப்படுகிறது?

தரவுகளின்படி, மண்ணின் ஈரப்பதம் குறைவான நிலையை எட்டும் போகுது சொலினாய்டு வால்வு (SOLANIOID VALVE) மூலமாக பாசனநீர் குழாய் திறக்கப்பட்டு, பயிர்களுக்கு தானாக (automatic ) நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

இப்பணிகளை வேறு இடத்திலிருந்து கைப்பேசி (MOBILE) மூலமாக கண்காணிக்க வசதியும் உள்ளது. இது முற்றிலுமாக வானிலை சார்ந்து இருப்பதால் டிஜிட்டல் முறையில் இயக்கப்படுகிறது.

பயன்கள்:

  • துல்லிய முறையிலான நீர்பாசனம் முறையில், மண்ணின் ஈரப்பதம் மற்றும் காலநிலையை பொருத்து, பயிர்களின் தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் மேற்கொள்ள இயலும்.
  • அதிகமாக பாசனநீர் விரையமாகுவது தடுக்கப்படும்.
  • இடுபொருட்களான உரங்கள், பூச்சி மருந்துகள் நீர்ப்பாசன முலம் இடுவதால் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படுகிறது.
  • அதிக வேலையாட்கள் தேவைப்படுவதில்லை.
  • பயிர்களுக்கு தேவையான நேரத்தில் நீர்ப்பாசனம் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைப்பதால் (மற்ற பயிர்களை விட) அதிகமாக மகசூல் கிடைக்க வழிவகையுண்டு.
  • சரியான ஊட்டசத்து மேலாண்மையால் மண்வளம் காக்கப்படுகிறது.சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

மானியம் ஏதேனும் உள்ளதா?

நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில், “விவசாயப் பணிகளுக்கு வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளதால், தானியங்கி முறை மூலம் நுண்ணீரிப் பாசன அமைப்புகளை இயக்கி பாசன நீரை பயிரின் தேவைக்கு ஏற்ப துல்லியமாக வேர்ப்பகுதியில் நேரடியாக அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தானியங்கி அமைப்புகளை நிறுவுவதற்கு, மானியம் வழங்கப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதற்கென, 2024-2025 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தானியங்கி சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்புவோர் அரசின் மானியம் பெற சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் அணுக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more: நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்?

எனவே இந்த தானியங்கி சொட்டுநீர்பாசன அமைப்பு, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு கேம்சேஞ்சராக உள்ளது என்றால் மிகையல்ல என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (9443570289) தெரிவித்துள்ளார்.

Read more:

வருடத்திற்கு 9 முறை அறுவடை- அடர்நடவு முறையில் முருங்கையில் இலை உற்பத்தி!

STI HUB திட்டம்: மீன் கழிவுகளை உரமாக மாற்றும் கேரளப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

English Summary: Automatic Drip Irrigation System Will it solve farmers problems
Published on: 21 May 2024, 04:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now