1. விவசாய தகவல்கள்

ஊரடங்கால் முடங்கிய வாழை இலை விற்பனை- விவசாயிகள் வேதனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Banana leaf sale crippled by drought - Farmers in pain!

Credit : AskNature

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், வாழை இலை வியாபாரம் முடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆண்டுப் பயிர் (Annual crop)

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் ஆண்டுப் பயிரான வாழை, கரும்பு போன்றவற்றை பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

வாழை சாகுபடி (Banana cultivation)

அந்த வகையில் இலை விற்பனையைக் கருத்தில் கொண்டு குமரலிங்கம் பகுதியில் பல விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கு  (Corona curvature)

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அரசு முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால், வாழை இலை விற்பனை அப்படியே முடங்கியதால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

5 மாதங்களில் வருமானம் (Earnings in 5 months)

வாழைக்காய் மற்றும் வாழைப் பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது வருமானம் பெறுவதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். ஆனால் இலைக்காக வாழை சாகுபடி செய்யும் போது 5 மாதங்களிலிருந்தே வருமானம் பெறத் தொடங்கலாம்.

தினசரி வருமானம் (Daily income)

  • அத்துடன் காய்கறி சாகுபடியைப் போலவே தினசரி வருமானம் தரக்கூடியது என்பதால் இலை வாழை சாகுபடியைத் தேர்வு செய்தோம்.

  • பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், கதலி, சக்கை, வயல் வாழை போன்ற ரகங்கள் இலை உற்பத்திக்குச் சிறந்ததாகும்.

  • ஒரு ஏக்கரில் 1600 வாழைகள் வரை நடவு செய்யலாம். ஒரு ஏக்கரில் தினசரி 1000 இலைகளுக்கு மேல் வெட்ட முடியும்.

ஆடிக்காற்று

அதிக காற்று வீசும் ஆடி மாதம் போன்ற பருவங்களில் காற்றினால் இலைகள் அதிகளவில் கிழிந்து சேதமாகும்.

வேலிப்பயிர் 

வாழைகளை நெருக்கமாக நடவு செய்வதன் மூலமும் வேலிப்பயிராக அகத்தி உள்ளிட்ட மடங்களை வளர்ப்பதன் மூலமும் இலைகள் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

உணவகங்கள் (Restaurants)

வாழை இலைகளைப் பொறுத்தவரை உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கு உணவு பரிமாறுவதற்காகவும், பார்சல் கட்டுவதற்கும் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்குத்தடை விதித்த போது இலை விற்பனை கணிசமாக உயர்ந்தது. ஆனால் காலப்போக்கில் அதிகாரிகள் கெடுபிடி தளர்ந்ததால் மீண்டும் உணவகங்களில் பார்சல் கட்டுவதற்கு பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

உட்கார்ந்து சாப்பிட  (Sit down and eat)

தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விற்பனை மந்தம் (Sales slump)

இதனால் இலைகளை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருமணம், திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள், ஒத்திவைத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சிறயளவில் நடைபெறுவதாலும், வாழையிலை விற்பனை இல்லை.

ரூ.3,000 வரை (Up to Rs.3,000)

சாதாரண நாட்களில் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டால் சுப முகூர்த்த தினங்களில் ரூ.3,000 வரை விற்பனையாகும்.

தேவை குறைந்தது (Demand is low)

ஆனால் தற்போது ஊரடங்கால் பெரும்பாலான சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒரு சில நிகழ்ச்சிகள் வீட்டளவில் எளிமையாக நடத்தப்படுகிறது. எனவே, வாழை இலைகளுக்கானத் தேவை குறைந்துள்ளது.

நிதிச்சுமை (Financial burden)

இதனால் கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளுக்கு வாழை இலைகளை வாங்கிச் செல்வதற்கு வியாபாரிகள் வரவில்லை. வியாபாரம் இல்லாததால், வாழையை இலைக்காகச் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வாறு விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்

வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Banana leaf sale crippled by drought - Farmers in pain!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.